districts

img

பாதை அடைப்பு: கொல்லாங்கரை மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், நவ.6 -  கொல்லாங்கரையில் பாதைப் பிரச்சனையை கண்டித்து பொதுமக்கள்  செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே கொல்லாங்க ரையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையைத் தனி நபர் தனக்கு சொந்தமான இடம் எனக் கூறி குழி தோண்டி சேதப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாகவும், அதனால் பள்ளி  மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடி யாமல் தவிப்பதாகவும் கூறி, ஆல மரத்தடி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாயன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் வட்டாட்சி யர் அ.அருள்ராஜ், நிகழ்விடத்துக்குச் சென்று கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண் டார். இதையடுத்து, இந்தப் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது  என்றும், சேதப்படுத்தப்பட்ட பாதையை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்புடைய அலுவலர் களிடம் வட்டாட்சியர் அறிவுறுத்தினார். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.