districts

img

அறிவுச் சமூகத்தை உருவாக்கப் பங்காற்றியவர்

புதுக்கோட்டை, செப்.28 - அறிவுச் சமூகத்தை உருவாக்கு வதில் பெரும் பங்காற்றியவர் முனைவர்  ஆர்.ராஜ்குமார் என்றார் சட்டப்பேரவை  உறுப்பினர் எம்.சின்னதுரை. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கமும்,  மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட மும் இணைந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமாரின் பன்முகப்  பணிகளுக்கான பாராட்டு விழாவை சனிக்கிழமை நடத்தின.  விழாவில் கலந்துகொண்டு சின்னத் துரை எம்எல்ஏ பேசுகையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் சின்னஞ்சிறிய கிராமமான ஆலங்காட்டில் பிறந்து மிகச் சிறந்த சமூக விஞ்ஞானியாக உயர்ந்த வர் ஆர்.ராஜ்குமார். கடந்த 35 ஆண்டு களுக்கும் மேலாக அறிவியல் இயக்கத் திலும், அறிவொளி, வளர்கல்வி, தொடர்  கல்வி இயக்கங்களிலும் மிகச் சிறப் பான பங்களிப்பைச் செய்துள்ளார். புதுக் கோட்டை மாவட்டத்தில் எழுத்தறிவு இயக்கத்தின் மூலமாக அறியாமை இருளை அகற்றவும், மூட நம்பிக் கைக்கு எதிராகவும், அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவும் அரும்பணி ஆற்றியுள்ளார். நாட்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சில வரு டங்களாக சிறப்பான பங்களிப்பைச் செய்து வருபவர் ஆர்.ராஜ்குமார். ‘ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானி’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட் டத்தில் 300-க்கும் மேற்பட்ட குழந்தை களை இளம் விஞ்ஞானியாக உருவாக்கி  சாதனை படைத்து வருகிறார்” என்றார். நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ‘ராஜ்குமாரின் பன்முகப் பணிகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கவிஞர்  நா.முத்துநிலவன், சமம் ஒருங்கி ணைப்பாளர் என்.கண்ணம்மாள், ஒன்றி யக்குழுத் தலைவர் மேகலா முத்து, பேரா.சா.விஸ்வநாதன், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், நான்சி.ஜே.அன பெல் ஆகியோர் பேசினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.ரெங்கலெட்சுமி, ஒன்றியக்குழுத் தலை வர் வள்ளியம்மை தங்கமணி, கவிஞர் ஜீவி, கவிஞர் ராசி.பன்னீர்செல்வம், கவி ஞர் மகாசுந்தர், கவிஞர் கீதா உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். ஆர்.சித்ரா ராஜ்குமார் ஏற்புரை வழங்கினார். முன்னதாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் க.சதாசிவம் வரவேற்க,  அறிவியல் இயக்க மாவட்டச் செயலா ளர் ம.வீரமுத்து நன்றி கூறினார்.