districts

img

ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் அமைக்க வேண்டும்

அரியலூர், டிச.28 - இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) அரியலூர் தொழி லாளர் நல வாரிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி தலைமைவகித்தார். மாவட்டத் தலை வர் கே.கிருஷ்ணன், துணைத் தலை வர்கள் ஆர்.சிற்றம்பலம், எம்.சந்தானம், செயலர் மெய்யப்பன், மாதர்  சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.மலர்கொடி ஆகியோர் உரை யாற்றினர். கட்டுமான சங்க மாவட்டப் பொருளாளர் கே.கற்பகவள்ளி, துணைத் தலைவர்கள் பங்கேற்றனர். கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களான மணல், ஜல்லி, கம்பி, சிமென்ட், எம்.சாண்ட் உள்ளிட்ட  பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான  தொழிலாளர்கள் வீடு கட்ட வழங்கப் பட்டு வரும் ரூ.4 லட்சத்தை நிபந்தனை  இல்லாமல் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவ லகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  பின்னர் மேற்கண்ட கோரிக்கை களை நலவாரியத்தில் மனுவாக அளித்தனர். முன்னதாக அனைவரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து  பேரணியாகச் சென்றனர்.