districts

img

ஆபத்து நிறைந்த உதகை மலைப்பாதையில் சரக்கு வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள்

உதகை, டிச.28- உதகை மலைப்பாதை யில், அகதிகள்போல் சரக்கு வாகனங்களில் தொழிலா ளர்கள் அழைத்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.  ஒவ்வொரு ஆண்டும் ஏப் ரல், மே மாத கோடை காலத் தில் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர ஆர்வம் காட்டுவார்கள். சீசன் காலங்களில் கூட்டம் அதிகரிக்கும் போது குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும். உதகை நகர் மற்றும் உதகை - மேட்டுப்பாளையம், உதகை - கூடலூர் சாலையில் அந்த அளவுக்கு வாகன போக்குவரத்து காணப்படும்.  தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற் றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருப் பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டு உள்ளதாலும் உதகையில் திரும்பும் திசை எல்லாம் சுற்றுலாப் பயணிகள் உள்ள னர். தங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை நிரம்பிவிட்டன. மேலும் சாலைகளில் போக் குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படு கிறது. வாகன போக்குவரத்தும் ஆபத்தும் அதிகம் நிறைந்த நீலகிரி மலை பாதை களில் புறநகர் பகுதியில், தோட்ட வேலை களுக்கு, சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றனர். சில நேரங்களில் அள வுக்கு அதிகமாக அகதிகளைப் போல  தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படு கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறு கையில், மலைப்பாதையில் கடந்த சில நாட்க ளாக சரக்கு வாகனங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பயணிப்பதை காண முடி கிறது. வளைந்து நெளிந்து கொண்டை ஊசி திருப்பங்களில் வாகனங்கள் செல்வதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், சரக்கு வேன் மற்றும் லாரியில் சரக்குகள் மீது அமர்ந்து குழந்தைகளுடன் எந்தவித பிடி மானமும் இல்லாமல் பெண்களும் பய ணிப்பதை பார்க்கும்போது பகீரென்று உள் ளது. இந்த நிலை நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்ததையடுத்து சரக்கு மூட் டைகளில் வட மாநில தொழிலாளர்கள் அமர்ந்திருந்தால் போலீசார் வாகனங்களை நிறுத்தி எச்சரிக்கை விடுத்தனர். இதனால் தற்போது சாலையில் இருந்து போலீசார் பார்த்தால் தெரியாத வகையில் சரக்கு மூட் டைகளுக்கு மேல் அமராமல் கீழே அமர்ந்து கொள்கின்றனர். ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே விதிகளை மீறி இவ்வாறு ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வரு வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், அவ்வாறு வாகனத்தை இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க  வேண்டும், என்றனர்.