சேலம், பிப்.27- வீராணம் பகுதியில் தனியார் ஸ்கேன் மையத்தில் கர்ப்பிணிகளின் கருவிலுள்ள பாலினத்தை கண்டறிந்து அறிவித்த சம்ப வம் தொடர்பாக காவல் துறையினர், மருத் துவத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வீராணம் பகுதியி லுள்ள ஸ்கேன் மையத்தில், சட்டவிரோத மாக கர்ப்பிணிகளின் கருவிலுள்ள பாலி னத்தை தெரிவிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் மாவட்ட மருத்துவத்துறையின் துணை இயக்குநரின் உத்தரவின்பேரில், வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்து வர் ரமேஷ்குமார் தலைமையிலான குழு வினர், வீராணம் பகுதியிலுள்ள கோழிப் பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல் பட்டு வந்த பசுபதி ஸ்கேன் மையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு கர்ப்பிணிகளின் கருவிலுள்ள குழந் தைகள் ஆணா? பெண்ணா? என்று கண்டறி யும் பணிகள் நடந்து வந்தது தெரியவந்தது. மேலும், ஆச்சங்குட்டபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெட வூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகிய 2 பேரும் இந்த ஸ்கேன் மையத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த ஆய்வில் 3 பெண்களுக்கு கரு விலுள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிந்தது உறுதிப்படுத்தப்பட்டது. பாலினத்தை அறிய ஒரு பெண்ணுக்கு தலா ரூ.15 ஆயிரம் வசூலித்ததும் தெரியவந் தது. இதையடுத்து மருத்துவர்கள் குழுவினர் ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 5 இடைத்தரகர்கள் மீது வீராணம் காவல் நிலை யத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.