திருப்பூர், பிப். 27 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுவதை முன்னிட்டு மார்ச் 5ஆம் தேதி திருப்பூர், மார்ச் 6ஆம் தேதி உடுமலை பேட்டையில் கருத்தரங்கங்கள் நடத்தப்படு கின்றன. இந்த கருத்தரங்கங்களில் ஆயிரக்க ணக்கான மக்களைத் திரட்டுவது என்று வர வேற்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட் டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரை மாந கரில் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இம்மாநாட்டுச் செய்தியை தமிழ கம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சி அணிகள் தீவிரமாகப் பணியாற்றி வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்புக்குழுவின் கூட்டம் வியா ழக்கிழமை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் வரவேற்புக்குழு தலைவர் எம்.ராஜகோ பால் தலைமையில் நடைபெற்றது. இதில் கட் சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள் ளிட்ட வரவேற்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரவேற்புக்குழு செய லாளர் கே.காமராஜ் மாநாட்டுக்கு திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில் மார்ச் 5 ஆம் தேதி திருப்பூர் மருதாசலபுரம் சாலை யில் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெறுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் பங் கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர். அதே போல் மார்ச் 6ஆம் தேதி உடுமலைபேட்டை யில் நடத்தப்படும் சிறப்புக் கருத்தரங்கில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், திண் டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இந்த இரு கருத்தரங்கங்களுக்கும் ஆயி ரக்கணக்கான மக்களைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதி களிலும் செங்கொடிகள் கட்டுவது, சுவர் விளம்பரம் செய்வது, தீக்கதிர் மாநாட்டு சிறப் பிதழுக்கு கூடுதல் சந்தா சேர்ப்பது, செந் தொண்டர் அணிவகுப்புக்கு இளைஞர்களை அணிதிரட்டி பயிற்சி அளிப்பது, மார்ச் 23ஆம் தேதி பகத்சிங் நினைவு நாளில் மாதிரி அணி வகுப்பு பேரணி நடத்துவது, சமூக ஊடகங்க ளில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டுச் செய்தி களை பரவலாக கொண்டு செல்வது, 24 ஆவது மாநாட்டைக் குறிக்கும் வகையில் மக் கள் கூடும் பிரதான இடங்களில் 24 செங்கொடி அலங்கார வளைவுகள் அமைப்பது என தீர்மா னக்கப்பட்டுள்ளது.