திருப்பூர், பிப்.27- திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி, செங்கப்பள்ளி கிராமம் சென்னி மலை பாளையத்தை சேர்ந்த பெரு மாள் - சரஸ்வதி தம்பதியினரின் மகள் நிர்மலா (24). இவர் கடந்த 22ஆம் தேதி ஊத்துக்குளி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடை யாளம் தெரியாத வாகனம் மோதி யதில் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், விபத்து ஏற்படுத்திய வாக னத்தைக் கண்டறிந்து வழக்குப்ப திந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் ஊத்துக் குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விபத்தில் காயமடைந்த நிர்மலா வுக்கு திருப்பூர் தனியார் மருத்துவம னையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புதனன்று நிர்மலா பரிதாபமாக உயிரி ழந்தார். ஊத்துக்குளி காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்தும் வழக்குப் பதிவு செய்யாததுடன், விபத்து ஏற்ப டுத்திய வாகனத்தையும் காவல் துறையினர் கண்டறியவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சரஸ்வதி உள் ளிட்டோர் காவல் நிலையத்தில் நேரில் முறையிட்டனர். இந்நிலையில், விபத்து நடந்து 4 நாட்களாகியும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்காததால் நிர்மலாவின் குடும்பத்தினர், உறவி னர் கோபம் கொண்டனர். எனவே விபத்து வாகனத்தைக் கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி நிர்மலாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஊத்துக்குளி சாலையில் புதனன்று மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், ஊத் துக்குளி சாலையில் உள்ள கண்கா ணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இருப்பினும் பொதுமக்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்படாமல் இரவு வரை தொடர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார், வருவாய் துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் ஊத்துக்குளி திருப் பூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவையில் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டநிர்மலாவின் உடலை பெற்றுக் கொள்ள குடும்பத் தார் மறுப்புத் தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியைக் கண்டுபி டித்து விட்டதாகவும் குற்றவா ளியைக் கைது செய்வதாகவும் காவல் துறையினர் உறுதியளித்த தால் சடலத்தை குடும்பத்தார் பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஊத்துக்குளியில் சாலை மறியல் கைவிடப்பட்டது.