கோவை, பிப்.27- சூலூர் பேரூராட்சியில் புதிய பூங்கா திறப்பு மற்றும் பள்ளி பராமரிப்புப் பணிகள் துவக்க விழா நடைபெற் றது. கோவை மாவட்டம், சூலூர் பேரூராட்சியில் ரூ.39 லட் சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கே.கே. சாமி நகர் பூங்கா திறப்பு விழா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் துவக்க விழா வியாழ னன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூங்காவைத் திறந்து வைத்தார். மேலும், பள்ளி பராமரிப்பு பணிகளையும் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி.ராஜ் குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சி தம், சூலூர் பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத்தலை வர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.