districts

img

பணி நெருக்கடியை கண்டித்து ஜன.7 ஆம் தேதி மறியல் போராட்டம்

சேலம், டிச.28- ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பணி நெருக்கடியை கண் டித்து, ஜன.7 ஆம் தேதியன்று மறி யல் போராட்டம் நடைபெற உள்ள தென, தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கம் அறி வித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்ச்சித் துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட 7 ஆவது மாநாடு, கோட்டை பல்நோக்கு அரங்கத்தில் சனியன்று நடைபெற்றது. முன்னதாக, சேலம் கோட்டை மைதானத்திலிருந்து ஊரக வளர்ச்சித்துறையினரின் பேரணியை, சங்கத்தின் முன் னாள் தலைவர் சி.முருகப்பெரு மாள் துவக்கி வைத்தார். இதைய டுத்து நடைபெற்ற மாநாட்டிற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் கா. செந்தில் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க.கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட மகளிர் துணைக்குழு ஒருங் கிணைப்பாளர் வே.காயத்ரி அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். மாநி லப் பொருளாளர் மா.விஜயபாஸ் கர் துவக்கவுரையாற்றினார். “வளர்ச்சித்துறையும், அனுபவங்க ளும்” குறித்து ஓய்வுபெற்ற இணை  இயக்குநர் ஆர்.ரமேஷ் உரையாற் றினார். சேலம் மாவட்ட ஆட்சியர்  ரா.பிருந்தாதேவி சிறப்புரையாற்றி னார். இம்மாநாட்டில், ஊரக வளர்ச் சித்துறையில் பணி சுமை மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து ஜன.3 ஆம் தேதி கருப்புப்பட்டை அணிந்து போராட்டம்; ஜன.7 ஆம் தேதி மறி யல் போராட்டம்; ஜன.10 மற்றும்  20 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெற உள்ள தென, தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. இதில், சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஜான் ஆஸ்டீன், மாவட்டப் பொருளாளர் எஸ்.வடி வேல், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் சுரேஷ், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி உட் பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராக கா. செந்தில், செயலாளராக தா.ஜான் ஆஸ்டின், பொருளாளராக எஸ். வடிவேல் மற்றும் 5 துணைத்தலை வர்கள், 5 இணைச்செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பின ராக எம்.விஜயகுமார், தணிக்கை யாளர்களாக லோகநாதன், ரகு ராமன், பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் ந.திருவேரங் கன் நிறைவுரையாற்றினார். முடி வில், மாவட்ட துணைத்தலைவர் பி.பழனிவேல் நன்றி கூறினார்.