திருப்பூர், பிப்.27- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுப் பட்டி ஊராட்சி புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், திருப்பூரில் இருந்து ஈரோடு பைபாஸ் செல்லும் சாலை நடுப்பட்டி ஊராட்சி புலவர்பாளையம் வழியாக செல்கிறது. இங்குள்ள பேருந்து நிறுத் தம் அருகில் வேகத்தடை இல்லை. அருகிலேயே கல்லூரி உள்ளது. தின சரி இவ்வழியாக பல்லாயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகி றது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு தலையிட்டு உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா குழு உறுப்பினர் பிரகாஷ் கூறுகையில், பல்லகவுண்டம்பாளையம் சிப்காட், விஜயமங்கலம் சுங்கச்சாவடி, பெருந் துறை சிப்காட், ஈரோடு உள்ளிட்ட பகுதி களுக்கு வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என்று தினந் தோறும் பல்லாயிரக்கணக்கானோர் புலவர்பாளையம் பேருந்து நிறுத் தத்தை கடந்து செல்கிறார்கள். இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க கோரி நெடுஞ்சாலை துறையிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளித்தும் காலம் தாழ்த்தி வருகின்ற னர். உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட் டால் மக்களை திரட்டி போராட்டம் நடத் துவோம் என கூறினார்.