districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

நாமக்கல், பிப்.27- பரமத்தி வேலூர் வட்டம், வேலூர் சிறப்பு நிலை பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாமக்க மாவட்டம், வேலூர் பேரூராட்சி செயல் அலு வலர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ப தால், ஆறு உட்பட நீர்நிலைகளில் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக குடிநீர் விநியோகம் 40 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள் ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8 இல் பறவைகள் கணக்கெடுப்பு

தருமபுரி, பிப்.27- தருமபுரி வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 8 ஆம் தேதி யன்று துவங்கவுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி வனக்கோட்டத் தில் 2025 ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற மார்ச் 8 மற் றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் சதுப்பு நிலத்தில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கப்படுகின்றன. இதைத்தொ டர்ந்து மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிலத்தில் வாழும் பறவைகள் கணக்கெடுப் புப் பணி நடைபெறுகிறது. இதில் பங்கு பெறுவதற்கு பறவைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், பறவைகளை அடையாளம் காணத் தெரிந்த தன்னார்வலர்கள், அரசு சாரா  தொண்டு நிறுவனத்தினர், பள்ளி, கல்லூரி மாணவிகள் மார்ச் 6 ஆம் தேதியன்று மாலை 5.30 மணிக்குள் தருமபுரி, மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 04342-230003 இல் தொடர்பு கொண்டு பெயர், தொலைபேசி எண், ஊர் போன்ற விவரங்களை தெரி வித்து பதிவு செய்து கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்டு வாரியாக குறைகளை கேட்டறிய வலியுறுத்தல்

நாமக்கல், பிப்.27- நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 39 வார்டு களுக்கும் மேயர், துணை மேயர், அதிகாரி கள் சென்று மக்களிடையே குறைகளைக் கேட்டறிய வேண்டும், என மாமன்ற உறுப் பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட் டம், மேயர் து.கலாநிதி தலைமையிலும், துணை மேயர் செ.பூபதி, ஆணையர் ரா.மகேஸ் வரி ஆகியோர் முன்னிலையிலும் புதனன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப் பினர்கள் பேசுகையில், ஆங்காங்கே குவிந் துள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண் டும். மேயர், துணை மேயர், ஆணையர் உள் ளிட்டோர் ஒவ்வொரு வார்டு வாரியாக சென்று மக்களிடம் குறைகளைக் கேட்ட றிந்து, அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும், என்றனர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் பணி யாற்றுவோருக்கு ஊதியம் வழங்க மாநக ராட்சி நிதியிலிருந்து ரூ.34 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட 117 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

‘காக்கும் கரங்கள்’ திட்டம்

‘காக்கும் கரங்கள்’ திட்டம் கோவை, பிப். 27- முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கான ‘காக் கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் கடன்பெற விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவும், வாழ்வாதாரத்தை மேம் படுத்தவும் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட் டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தத் திட்டத்தின் மூலம் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெற லாம். முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது 55  ஆகவும், கைம்பெண்கள், மணமாகாத மகள், கணவரைப் பிரிந்த மகள்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிக பட்ச வயது 55 ஆகவும் இருக்க வேண்டும். பயனாளி தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. வருமான வரம்பும் இல்லை. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் ஏற்கெனவே மத்திய, மாநில அரசிகளின் இதைப்போன்ற திட்டத்தில் பயன்பெற்றிருக்கக் கூடாது. இந்தத் திட்டம் குறித்து வரும் மார்ச் 5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் விரி வாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்  பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ, 0422 2974107  என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என  கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

எம்.பி. தொகுதி மறுவரையறை: அதிமுக நிலை என்ன? மேயர் கேள்வி

எம்.பி. தொகுதி மறுவரையறை: அதிமுக நிலை என்ன? மேயர் கேள்வி திருப்பூர், பிப். 27 – ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரை யறை குறித்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்று திருப் பூர் மாநகர மேயரும், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளரு மான ந.தினேஷ்குமார் கேள்வி எழுப்பினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வியாழனன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதா வது: திமுக தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை மக் களுக்கு வழங்கி வருகிறது ஒன்றிய அரசின் மாற்றான் தாய்  மனப்பான்மை மற்றும் பாரபட்சம் காரணமாக நிதி வழங்கா மல் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தற்பொழுது 2026ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக  அரசு மேற்கொள்ள உள்ளது. பாஜக அரசு எந்த ஒரு செயல் பாட்டையும் சொல்லிவிட்டு செய்வதில்லை. விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையான விளக்கங் கள் வழங்கப்படாமல் உள்ளது. மக்கள் தொகை கணக்கெ டுப்புக்குப் பின்னர் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால்,  ஐந்து மாநிலங்களில் வெற்றி பெறுவதன் மூலம் பாஜக ஆட்சி  அமைக்க முடியும் என நினைக்கிறது. இந்த திட்டம் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க செய்யப்படும் மறைமுகமான வழியாகும். மேலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள்  தொகை கட்டுப்பாடு திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத் தப்படவில்லை. தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு  முறையாக இல்லாத சூழலில், இது போன்ற மக்கள் தொகை  கணக்கெடுப்பு மூலமாக நாடாளுமன்ற தொகுதி மறு வரை யறை செய்வது பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க செய்யும்  திட்டமாகும். இதன் மூலம் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் எண்ணிக்கைக் குறைக்கப்படவும், அதிகா ரம் பறிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. பாஜக அரசு எடுத் தோம் கவிழ்த்தோம் என்பதைப் போல தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்த திட்டம் ஒரு பேராபத்து. தென்னகத்தின்  அதிகாரம் பறிக்கப்படும் என தெரிவித்தார். அண்ணாமலை அரை வேக்காட்டுத்தனமாக பத்திரிகையாளர்களை சந்தித்து  வருகிறார். தொகுதி மறு வரையறை குறித்து அதிமுக தனது  நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

நிதி மோசடி நிறுவன நிலம் பொது ஏலம்

நிதி மோசடி நிறுவன நிலம் பொது ஏலம் திருப்பூர், பிப். 27 - திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் கிராமத் தில் 12 ஏக்கர் புஞ்சை நிலம் பொது ஏலம் மூலம் விற்பனை செய் யப்படுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகே யன் கூறினார். கோவை வா.சுபாஸ்வாதி ஆட்டோ பைனான்ஸ் மற்றும்  அபிலாஷ் ஆட்டோ பைனான்ஸ் நிதி மோசடியில் ஈடுபட்ட தால், கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றம் அந்நிறுவனத்தின்  சொத்துக்களை முடக்கி, பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய  உத்தரவிட்டுள்ளது. ரூ. 9 கோடியே 60 லட்சம் அடிப்படை மதிப் பாகக் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலரால் மார்ச் 13  அன்று பகல் 11 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக 2ஆம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தை மார்ச் 11 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

169 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

திருப்பூர், பிப். 27 - வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வருவாய் துறை யின் சார்பில் 169 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட் டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூரில் இந்து  சமய அறநிலையத் துறையின் சார்பில் ரூ.48.80 லட்சம் மதிப் பீட்டில் அத்தனூரம்மன் குப்பயண்ணசாமி கோயிலில் அலுவ லக கட்டிடம் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று திறந்து வைத் தார். இதைத் தொடர்ந்து, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றி யத்தில் வருவாய்த் துறையின் சார்பில் 24 பயனாளிக்கு இல வச வீட்டுமனைப் பட்டாக்களையும், 144 இ-பட்டாக்களையும்,  ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு இல வச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் மங்கலப்பட்டி, பூமாண் டவலசு, வேலம்பாளையம் கிராமங்களுக்கு உட்பட்ட 169 பய னாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவழங்கப்பட்டது.

10 ஆண்டுகளில் 22 லட்சம் மரங்கள்: வனத்துக்குள் திருப்பூர் சாதனை

திருப்பூர், பிப். 27 – வெற்றி அறக்கட்டளை சார்பில் முன்னெடுக்கப்பட்ட  வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு சார்பில் 2014ஆம் ஆண்டு  முதல் இந்த 10 ஆண்டுகளில் 22 லட்சம் மரங்கள் நடப்பட்டு உள் ளதாக வனத்துக்குள் திருப்பூர் தலைவர் சிவராமன் கூறி னார். வனத்துக்குள் திருப்பூர் 10ஆம் ஆண்டு நிறைவு விழா வும், 11ஆம் ஆண்டிற்கான நர்சரி தொடக்க விழாவும் மார்ச்  1ஆம் தேதி சனிக்கிழமை ஐகேஎப்ஏ வளாகத்தில் நடைபெறு கிறது. இந்த விழா குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சிவ ராமன் கூறியதாவது: வெற்றி அறக்கட்டளை சார்பில் நொய் யல் ஆற்றில் மங்கலம் பகுதியில் இடிந்து போன அணைக் கட்டை சரி செய்து, ஆண்டிபாளையம் குளத்தைத் தூர்வாரி நீர்  நிரப்பி இன்று வரை குளம் நீர்நிரம்பி இருக்கிறது, இடுவம்பா ளையம் பள்ளியில் 24 வகுப்பறைகள் கட்டிக் கொடுத் தோம். அப்துல் கலாம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து 1 லட்சம்  மரங்கள் நட்டோம். இப்பணியைத் தொடர்ந்து நடத்த வேண் டும் என நன்கொடையாளர்கள் தெரிவித்த நிலையில் வனத் துக்குள் திருப்பூர் என 10 ஆண்டுகளில் 22 லட்சம் மரங்கள் நடப் பட்டுள்ளது என்று தெரிவித்தார். வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குநர் குமார் துரைசாமி  கூறுகையில், பருவமழை காலங்களில் பாதுகாக்கப்பட்ட விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டோம். ஆரம்பத்தில் வெளியில் மரக்கன்றுகள் வாங்கி நடப்பட்டது. தற்போது  நான்கு இடங்களில் நர்சரிகள் அமைத்து விதைகள் ஊன்றி  மரக்கன்றுகள் வளர்த்து அதை பல பகுதிகளிலும் நட்டு மரங்க ளாக வளர்த்து வருகிறோம் இரண்டாண்டுகளுக்கு முன்பு  மாநகராட்சி ஒத்துழைப்புடன் ரிசர்வ் சைட்டுகளில் மரங்கள்  நடுகிறோம். நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல சங்க இலக்கியப் பூங்கா மூலம் சங்ககால  மரங்களை நட்டு வளர்த்திருக்கிறோம். அறிவியல் பூங்கா மக் களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சனிக்கிழமை 10ஆம் ஆண்டுநிறைவு விழாவில் கால நிலை மாற்றத்தில் தொழில் முனைவோர் பங்கு என்பது  குறித்து கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என்று குமார் துரை சாமி தெரிவித்தார்.

வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதாவை கைவிடக் கோரி திருப்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

திருப்பூர், பிப். 27 - ஒன்றிய பாஜக அரசின் வழக்கறிஞர் சட் டத் திருத்த மசோதா 2025-ஐ திரும்பப் பெற  வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வழக்க றிஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025ஐ மத்திய அரசு திரும்பப் பெற  வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 26ஆம்  தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நான்கு  நாட்கள் நீதிமன்றப் பணியில் இருந்து வழக்க றிஞர்கள் விலகி இருப்பது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்க ளின் கூட்டுக்குழு (ஜாக்) முடிவு செய்திருக்கி றது.  அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த நீதிமன்றம், பல்லடம், காங்கேயம், ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலை மற்றும்  மடத்துக்குளம் நீதிமன்றங்களில் புதன்கி ழமை முதல் வழக்கறிஞர்கள் பணி புறக்க ணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜாக் பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதுடன், ஜனநா யக விரோத சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தியாவில் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள், வெளி நாட்டு வழக்கறிஞர்களை நீதித்துறை பணி யில் அனுமதிக்க கூடாது, வழக்கறிஞர் சட்ட  திருத்த மசோதாவுக்கு பிப்ரவரி 28 ஆம் தேதிக் குள் திருத்தம் மற்றும் கருத்து தெரிவிக்கலாம்  என குறைந்த நாட்கள் மட்டும் கால அவகாசம்  கொடுத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதன்மூ லம் வழக்கறிஞர் சட்டத்தை அவசரகதியில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை  ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக இயற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு வழக்கறி ஞர் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த  வேண்டும், வழக்கறிஞர்கள் சேமநல முத் திரை வில்லையை ரூ.30-இல் இருந்து ரூ.120  ஆக உயர்த்தப்பட்டதை மறு பரிசீலனை செய்து குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், ஒன்றிய அரசு மூன்று புதிய குற்ற வியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்,  இந்த குற்றவியல் சட்டங்களை ஆராய அறி விக்கப்பட்ட, நீதிபதி சத்யநாராயணன் விசா ரணைக் குழு அறிக்கையைப் பெற்று புதிய  குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெறுவதற்கு, தமிழக அரசு அழுத்தம்  கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு எதிரான மசோதா வையும், ஜனநாயக விரோத சட்டங்களை யும் ஒன்றிய அரசு முழுமையாக திரும்ப  பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர், பிரத மர், உள்துறை அமைச்சர், ஒன்றிய சட்ட அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலை வர், தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்கள், இந்திய பார் கவுன்சில்  மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் ஆகியோ ருக்கு கடிதங்கள் அனுப்புவது என்றும் ஜாக்  முடிவு செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தங்களை நாடாளு மன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்த அகில  இந்திய அளவில் ஒருங்கிணைந்து நடைபெ றும் போராட்டங்களில் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்  அடிப்படையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்த னர்.

நிலக்கடலை சாகுபடி முக்கிய குறிப்புகள்: வேர் அழுகல் நோய் தாக்குதல்

உடுமலை, பிப். 27 - நிலக்கடலை இளவயது செடிகளை அதிகம் தாக்கும் வேர்  அழுகல் நோயின் முக்கிய அறிகுறி, இலைகள் மஞ்சள் நிற மாகி ஓரிரு நாட்களில் செடிகள் மடிந்து விடும். மிகச் சிறிய  செடியின் கரும்பழுப்பு புள்ளிகள் தோன்றி சில தினங்களில்  செடி கருகிவிடும். தாக்கப்பட்ட செடிகளில் வெண்மை கலந்த  சாம்பல் நிற பஞ்சு வளர்வதைக் காணலாம். தாக்கப்பட்ட  செடியின் வேர்கள் நார்நாராகக் கிழிந்து காணப்படும். காய்க ளில் தாக்குதல் காணப்படும்போது காயை உடைத்தால்  கருப்புக் கலரில் பூசணங்கள் ஒட்டிக்கொண்டு பருப்பு வளர்ச்சியைத் தடுத்துவிடும். இவற்றை கட்டுப்படுத்த டிரைக்கோ டெர்மா விரிடி என்ற  உயிர் பூஞ்சைக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தல்  (10 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி, 1 கிலோ விதை, சூடு  ஆறிய அரிசி வடிகஞ்சி 200 மில்லியுடன் கலந்து நிழலில்  உலர்த்தி விதைத்தல்) அடிஉரமாக 2 கிலோ டிரைக்கோ டெர்மாவினை 25 கிலோ மக்கிய எருவுடன் கலந்து  விதைத்து இயற்கையாகவே வயலில் இவ்வகை பூசணத் தினை பெருகச் செய்ய வேண்டும். வயலில் தொழு உரம், கம்போஸ்ட் போன்றவற்றை இட்டு மண்ணால்  அங்கச் சத் தினை அதிகரித்தல் நலம். இலைப்புள்ளி நோய் தாக்குதல்  விதைத்த 30 நாட்களுக்கு இலைப்புள்ளி நோய் தாக்கு தலை காணலாம். முதலில் இலையில் கருமை நிற சிறிய  வட்ட வடிவ புள்ளிகள் தோன்றும். நாளடைவில் விரிவ டைந்து இலையின் முக்கால் பாகத்திற்கு காணலாம். மேலும்  இலைக்காம்பு, தண்டு, பூவின் காம்பு போன்ற பகுதியிலும்  இதன் தாக்குதலைக் காணலாம்.  இந்த நோயின் தாக்குதல் பூக்கும் பருவத்தில் இருந்து  அறுவடை வரை அதிகமாகக் காணப்படும். நோய் தாக்கப் பட்ட இலைகள் உதிர்ந்துவிடும். தாக்குதல் பூவின் காம்பில்  தோன்றினால் காய் வெடிப்பது குறைந்து விடும். இவற்றை  கட்டுப்படுத்த டைத்தேன் எம்.45 மருந்து ஒரு லிட்டர் தண்ணீ ருக்கு 2.½ கிராம் என்ற விகிதத்தில் கலந்து  தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் தகவலுக்கு மார்க்கண் டன், உதவி வேளான் அலுவலர் 9894936328 தொடர்பு கொள்ளவும்.

படைவீரர் குறைதீர் கூட்டம்

திருப்பூர், பிப்.27- திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீ ரர், படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவ ரைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் விழிப்பு ணர்வு கூட்டம் மார்ச் 4 செவ் வாயன்று 11 மணிக்கு திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகம்,  தரைத்தளம் அறை எண். 20-இல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. எனவே, இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகள் 10 மணிக்கு நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

விடுமுறை தராத காரணத்தால் தற்கொலைக்கு முயன்ற காவலர்

விடுமுறை தராத காரணத்தால் தற்கொலைக்கு முயன்ற காவலர் கோவை, பிப்.27- கோவை ஈஷா யோகா மையம் சிவராத்திரி விழா பாது காப்பு பிற்கு வந்த பார்த்திபன் என்ற காவலர், விடுமுறை  கிடைக்காத மன அழுத்ததில் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் புதனன்று நடைபெற்ற  சிவராத்திரி விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இதனை தொடர்ந்து பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த  போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த னர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் டி.எஸ்.பி தங்கவேல் என்பவரின் டிரைவராக பணிபுரிந்து வருப வர் காவலர் பார்த்திபன். பார்த்திபன் சொந்த வேலை காரண மாக விடுமுறை கேட்டிருந்த நிலையில், அவருக்கு விடுப்பு  அளிக்காமல் கோவையில் பாதுகாப்பு பணிக்காக அழைத்து  வரப்பட்டுள்ளார். விடுமுறை அளிக்காததால்  மன அழுத்ததில் இருந்துள்ளார். புதனன்று இரவு கோவை  மத்வராயபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  இருந்த போது அவரிடம் இருந்த கத்தியால், கழுத்தை அறுத்து காவலர் பார்த்திபன் தற்கொலைக்கு முயன்றார்.  கத்தியால் அறுத்துக் கொண்டதில் கழுத்தில் காயம் ஏற்பட்ட  நிலையில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவை அரசு மருத்து வமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த  காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக காவலர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அதிமுக நிர்வாகி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அதிமுக நிர்வாகி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் கோவை, பிப்.27- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர் வாகி சங்கர் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜரானார். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். இவ்வழக்கில் உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையின் போது தனிப்படையில் இருந்த உதவி ஆய் வாளர்கள் விஜயகுமார், வேலுசாமி, மகேஷ் குமார் ஆகி யோருக்கு நேரில் ஆஜராக சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப் பப்பட்டது. அதே போல், இந்த எஸ்டேட்டில் கம்ப்யூட்டர்  ஆபரேட்டராக வேலை செய்துவந்த ஊழியர் தினேஷ் குமார்  தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகவும் போலீ சார் தனியாக விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தினேஷ்  குமார் தொடர்பாக விசாரணை நடத்த, அவர் தற்கொலை செய்து கொண்டபோது ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற ஓட்டு நர் கபீர், கொடநாடு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி  சங்கர் ஆகியோர் தொடர்பில் இருப்பது கண்டறியப் பட்டது. செவ்வாயன்று காவலர் மகேஷ் குமார் சிபிசிஐடி  அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். இந்நிலையில் அதிமுக நிர்வாகி சங்கருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருந்த நிலையில் வியாழனன்று அவர் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி  இருக்கிறார். கொடநாடு மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரிக்க  சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் சம்மன் வழங்கினர். ஆனால்  அவர் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து விரை வில் அவருக்கும் சம்மன் வழங்கி நேரில் அழைத்து விசாரிக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை 

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை  கோவை, பிப்.27- ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் ஆறு மாச டைந்து துர்நாற்றம் வீசுவதால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  கோவை மாவட்டம், ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளில் சுமார் 20  ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவு நீர், சுத்திகரிப்பு செய்யாமல் நேரடி யாக உப்பாறு மற்றும் நல்லாறு ஆற்றில் நேரடியாக கலக்கி றது. இதனால் இந்த இரண்டு ஆறுகளும் அதிக அளவில் ஆகா யத்தாமரை படர்ந்து நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.  மேலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள், நெகிழி பைகள் கழிவுகளும் ஆற்றில் மிதந்து கொண்டி ருக்கிறது. இதனால் குடிநீருக்காக தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடைகளில் கேன் தண்ணி வாங்கி குடிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக  அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த இரண்டு ஆறுக ளிலும் கழிவுநீர் கலக்காதவாறு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் அறையில் போலீசார் திடீர் சோதனை

மாணவர்கள் அறையில் போலீசார் திடீர் சோதனை கோவை, பிப்.27- கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் அதி காலை நேரத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட னர். கோவையில் உள்ள ஏராளமான கல்வி நிறுவனங்களில் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்  மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங் களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். இவர்க ளில் சில மாணவர்கள் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியி லும், பலர் கல்லூரிக்கு வெளியே அறை எடுத்து தங்கியும்  படித்து வருகிறார்கள். இந்நிலையில், கோவை சரவணம்பட்டி காவல் நிலை யத்திற்கு உள்பட்ட சின்ன வேடம்பட்டி, சின்ன மேட்டுப்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் மேன்ஷன்களில் வெளி  மாவட்டங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு இங்கு  வந்து மாணவர்களின் போர்வையில் தங்கி இருக்கும் நபர் களை கண்டறியவும், அவர்கள் போதைப் பொருள்களை வைத்து உள்ளார்களா என கண்டறியவும் கல்லூரி மாண வர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகள், வீடுகள்  உள்ளிட்ட பகுதிகளில் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணை யர் வேல்முருகன் தலைமையில் 3 ஆய்வாளர்கள் மற்றும்  8 உதவி ஆய்வாளர்கள், 70க்கும் மேற்பட்ட போலீசார் வியாழ னன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியி ருந்த அறைக்கு வந்த போலீசார் கதவைத் தட்டினர். அவர் கள் கதவைத் திறந்ததும், உள்ளே சென்று சோதனை மேற் கொண்டனர். மாணவர்கள் வைத்திருந்த பைகள், சூட்கேஸ் கள், அலமாரி, கட்டில்கள், குப்பைத் தொட்டிகள் என அனைத் திலும் சோதனை நடத்தினர். அறைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற் றும் கஞ்சா போன்றவை  மறைத்து வைத்துள்ளனரா என வும் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அறையில்  சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருள்களை பறிமுதல் செய்த னர். தொடர்ந்து மாணவர்களிடம், அவர்களின் பெயர், சொந்த  ஊர், அவர்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், பாடப்பிரிவு  மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பதிவு செய் யப்பட்டுள்ளதா எனவும் விசாரித்தனர். இந்த சோதனை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. கல்லூரி மாணவர்களின் அறைகளில் அதிகாலை நேரத் தில் நடத்தப்பட்ட இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப் பாக காணப்பட்டது.