districts

img

வன அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

உடுமலை, ஜூலை 12- உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் வாழும் மலை கிராம மக்களுக்கு 2006 வன உரிமை  சட்டத் தின்படி, அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி புதனன்று மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் தொடர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடு மலை மற்றும் அமராவதி வனச்சரகத் தில் குளிப்பட்டி, குருமலை, மாவ டப்பு, பூச்சிக்கொட்டாம் பாறை, தளிஞ்சி, கோடந்தூர், காட்டுப்பட்டி உள்ளிட்ட 18 மலைவாழ் கிராமங் கள் உள்ளன. இங்கு சுமார் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர், உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல்  பல ஆண்டுகளாக வசித்து வருகின்ற னர். மாநில அரசு பழங்குடி இன மக்க ளுக்கு உதவி செய்ய முன் வந்தாலும், இங்குள்ள வனத்துறை அதிகாரிகள் தங்களை புறக்கணித்து வருகின்ற னர். எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யவிடாமல் வனத்துறை அதிகா ரிகள் தடுத்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். திருமூர்த்திமலை பகுதியிலிருந்து குருமலைக்கு செல்ல வனப்பகுதி யில் பாதை அமைக்க வனக்குழு சார் பிலும் தளி பேரூராட்சியில் சிறப்பு தீர் மானம் நிறைவேற்ற பட்டு தற்பொழுது வரை வனத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாரம் பரியமாக பயன்படுத்தி வரும் நடை பாதையில் 2016 வன உரிமை சட்டப் படி சாலை அமைக்க வேண்டும். ஆறு களை கடந்து செல்லும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு பாலங் கள் கட்டி தர வேண்டும். வன உரிமை சட்டப்படி மக்களுக்கு பயன்படும் இடங்களில் வனப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களுடன் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

முன்னதாக இந்த போராட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மலை வாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளர் கோ.செல்வன், நிர்வாகி கள் குப்புசாமி, மணிகண்டன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர். மதுசூதணன், ஆர்.குமார், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பஞ்ச லிங்கம், கனகராஜ், உடுமலை நகர  செயலாளர் தண்டபாணி, விவசாய  சங்க நிர்வாகிகள்,  பாலதண்டபாணி, உடுக்கம்பாளையம் பரமசிவம், ராஜ கோபால், அருண்பிரசாத் உள்ளிட்ட  திரளான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். உறுதிமிக்க தொடர் போராட்டத் தையடுத்து, மாவட்ட துணை வன அலுவலர், காவல்துறை துனை கண் காணிப்பாளர், உடுமலை வட்டாட் சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முடிவும் கிடைக்காத காரணத்தால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.