திருப்பூர், ஜூலை 13 – இலவச வேட்டி, சேலை கைத்தறியில் உற் பத்தி செய்வது உள்ளிட்ட கைத்தறி நெசவா ளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கேயத்தில் கைத்தறி நெசவாளர்கள் தொழிற்சங்க கூட்ட மைப்பினர் பேரணி நடத்தி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டா ரத்தில் கைத்தறி நெசவுத் தொழில் கணிசமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு காரணங்க ளால் கைத்தறி நெசவாளர்கள் தற்போது கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன் வைத்து கைத்தறி நெசவாளர் தொழிற்சங்க கூட்டமைப்பினர் வியாழக்கிழமை காங்கே யம் திருப்பூர் சாலை ஹாஸ்டல் பஸ் நிறுத்தம் முன்பிருந்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண் நெசவாளர்கள் உள்பட பெருந்திரளான கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் திருப்பூர் சாலையில் இருந்து பஸ் நிலையம் வழியாக சென்று கோவை சாலையில் உள்ள காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நிறை வடைந்தது. இந்த ஊர்வலத்தில் திருப்பூர் மாவட்ட சிஐ டியு கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் கே.திருவேங்கடசாமி, மாவட்டச் செயலாளர் என்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ.ராமநாதன், தமிழ்நாடு கைத்தறி நெசவா ளர் சங்கத்தைச் சேர்ந்த கே.எஸ்.செல்வராஜ், பி.சத்தியவான், காங்கேயம் கைத்தறி பட்டுப் புடவை உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் தலைமை ஏற்று அணிவகுத்து வந்தனர். மத்திய, மாநில அரசுகள் பட்டு நூல், கைத் தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய் வதைத் தடை செய்ய வேண்டும், குறைக்கப் பட்ட கைத்தறி நெசவாளர் கூலியை உயர்த் திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், 60 வயது பூர்த்தி அடைந்த நெசவாளர் களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங் கள் எழுப்பியபடி நெசவாளர்கள் வட்டாட்சி யர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக் கொடுப்பதற்குச் சென்றபோது வட் டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவல கத்தில் இல்லை. இதையடுத்து அவர் வரும் வரை அங்கேயே காத்திருப்பது என்று நூற் றுக்கணக்கானவர்கள் வட்டாட்சியர் அலுவ லகத்தில் முற்றுகையிட்டு அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து காங்கேயம் வட்டாட்சி யர் அங்கு வந்து சேர்ந்தார்.
அவர் கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப் பின் நிர்வாகிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். இதில் கைத்தறி ரகங்களை விசைத்தறி யில் உற்பத்தி செய்வதைத் தடுக்கவும், 21 ரகங்களைக் கைத்தறியில் உற்பத்தி செய் வதை உறுதிப்படுத்தவும், ஜவுளிக் கடைக ளில் கைத்தறி புடவை என்று விசைத்தறியில் உற்பத்தி செய்த புடவைகள் விற்பனை செய் வதைக் கண்டறிந்து அதை தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங் கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டு முழுவதும் கைத் தறி நெசவாளர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலவச வேட்டி, சேலைகளை கைத்தறியில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும், தனியார் புடவை உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி கூலிக்குறைப்பை தடுத்திட வேண்டும், பட்டு நூல், ஜரிகை முதலிய மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்ற இறக்கம் இன்றி சீரான விலையில் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு வங்கி ஏற்படுத்தி நெசவாளர் களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதி உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். காங்கேயம் நகரம் முழுவதும் ஒன்றுபடுத்தி கைத்தறிக் குழுமம் ஏற்படுத்தித் தர வேண் டும், தனியார் நெசவாளர்களுக்கு இலவச தறி சாமான், உதிரி பாகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு வில் வலியுறுத்தி உள்ளனர்.