திருப்பூர், டிச. 28 – திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்புக்குழுக் கூட்டம் சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (திசா) குழுத் தலைவரான, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் 27 துறை சார்ந்த திட்டப்பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அது தொடர்பான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டது. மேலும், மாநில ஊரக வாழ்வாதார இயக் கம், சத்துணவுத்திட்டம், தேசிய சமூக நலத்திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல் வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கே.சுப்பரா யன் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், ஈரோடு எம்.பி., கே.ஈ.பிரகாஷ், பொள்ளாச்சி எம்.பி., க.ஈஸ்வரசாமி, மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையார் எஸ்.ராமமூர்த்தி, துணை மேயர் ரா.பாலசுப்பிரம ணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ. மலர்விழி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.