சேலம், நவ.6- குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர மைக்க வேண்டும் என வலியு றுத்தி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்க கிரி அருகே உள்ள மகுடஞ் சாவடி ஒன்றியம், வைகுந்தம் ஊராட்சிக் குட்பட்ட இடையப்பட்டி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தார்ச்சாலை குண்டும், குழியு மாக உள்ளது. இதனை உடனடியாக சீர மைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அப்போது மகு டஞ்சாவடி காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். முன்ன தாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.