districts

img

வக்பு திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.27- வக்பு திருத்தச் சட்டம் – 2024யை திரும்பப்பெற வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு வாரியங்களை முடக்கி, அதன்  சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக் கும் வகையில், அரசமைப்புச் சட்டத் திற்கு விரோதமான விதிகளைக் கொண் டிருக்கும் வக்பு திருத்த மசோதா –  2024யை மதச்சார்பற்ற கட்சிகள் கடுமை யாக எதிர்த்து வருகின்றன. இந்த  மசோதா அரசமைப்புச்சட்டம் சிறு பான்மை இஸ்லாமியர்களுக்கு அளித் துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பாரபட்சமாக கருதும்  வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தை திரும் பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சியினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டத்தலைவர் என்.சுபேதார் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நசர் அக மது, எஸ்.ஏ.இர்பான்பாஷா, பைரோஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செய லாளர் ஏ.நியாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.இலியாஸ், விசிக  மேலிடப் பொறுப்பாளர் பொ.மு.நந்தன், திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச்செயலாளர் செல்லதுரை உட் பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சேலம் நாடாளுமன்ற உறுப்பி னர் டி.எம்.செல்வகணபதி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஷேக்  முகமது உட்பட பலர் கலந்து கொண்ட னர்.