தருமபுரி, நவ.1- தருமபுரியில் நவ.26 ஆம் தேதி அரசியல் சட்ட பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. சமூக நல்லினக்க மேடையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித் தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சுபேதார், மக்கள் கண்காணிப்பகம் அமைப் பாளர் செந்தில் ராஜா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் நியாஸ், பொருளாளர் இதயத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஜவர்ஹர்லால் நேரு பிறந்தநாளான நவ.14 இல் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்துவது; நவ.26 இல் தருமபுரியில் அரசியல் சட்ட பாதுகாப்பு கருத்தரங்கம் நடத்துவது; மக்கள் ஒற்று மையை வலியுறுத்தி கிறிஸ்துமஸ், பொங்கல் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், வாக்கு ரிமையை பறிக்கும் எஸ்.ஐ.ஆர். திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
