districts

img

தனியார்மயத்தை கைவிடுக: வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கோவை, டிச.28- பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் அமைப்பின் சென்னை மண்டல மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழி யர் அமைப்பின் 2 ஆவது சென்னை  மண்டல மாநாடு, கோவை - திருச்சி சாலையில் உள்ள காப்பீட்டு ஊழி யர் சங்க அலுவலகம் சரோஜ் நிலை யத்தில் நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு, சென்னை மண்டலத் தலை வர் பிரபா வெங்கடேசன் தலைமை  வகித்தார். மண்டலச் செயலாளர் தேவிகா மோகன கிருஷ்ணன் வேலை அறிக்கையை முன் வைத் தார். அகில இந்திய பொதுச் செய லாளர் ஶ்ரீஜித் சென்குப்தா துவக்க உரையற்றினார். மாநாட்டை வாழ்த்தி, அகில இந்திய வங்கி ஊழி யர் சங்க முன்னால் இணைச்செய லாளர் சுக்மாய் சர்க்கார், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டி. இரவிக்குமார், மாநில துணைத்த லைவர் என்.ராஜகோபால் மாவட் டச் செயலாளர் ஆர். மகேஸ்வரன், மாவட்ட நிர்வாகி ஜி.பி. ஜீவானந் தம் ஆகியோர் பேசினர். இம்மாநாட்டில், ஊழியர்கள் கூடுதல் நேரம் வங்கியில் வேலை  செய்யும் நிலையில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும். பஞ் சாப் நேஷனல் வங்கியில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். வாடிக்கையாளர்களி டம் கூடுதல் சேவை கட்டணங்கள் வசூல் செய்வதை கைவிட வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சென்னை மண்டலத் தலைவராக பிரபா வெங்கடேசன், செயலாளராக தேவிகா மோகனகிருஷ்ணன், பொருளாளராக தேவி இளவேனில் உள்ளிட்ட 14 பேர் கொண்ட மண்டல நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட் டனர். முடிவில், மண்டல துணைத்  தலைவர் செந்தில் ஆறுமுகம் நன்றி கூறினார்.