திருப்பூர், நவ. 4 - கவிஞர் தணிகைச்செல்வன் எழுதிய கவிதைகள் இளை ஞர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தின என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத் தில் புகழாரம் சூட்டப்பட்டது. திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஞாயிறு மாலை தமுஎ கச திருப்பூர் தெற்கு கிளை சார்பில் எழுச்சி கவிஞர் தணிகை செல்வன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. கவிஞர் நிதர் சனா கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாய் தமிழ் பள்ளி கு.நா.தங்கராசு, அஸ்வத் பொன்னுசாமி, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், மாவட் டச் செயலாளர் இரா.குமார், மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணே சன், நாட்டுப்புறப் பாடகர் வேலா.இளங்கோ, ஈ.அங்குலட்சுமி, “ஒருநாள்”செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று கவிதையாய், பாடலாய் கவிஞர் தணிகைச்செல்வன் கவிதைகள் பற்றி நினைவுரை ஆற்றினர். நிறைவாக சாரதி சுதர்சன் நன்றி கூறி னார்.