நாமக்கல், செப். 12- விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆடுகளைக் கொன்று, அழிக்கும் வெறி நாய்கள் கட்டுப்படுத்த வலியு றுத்தி சேந்தமங்கலம் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வியாழனன்று காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சேந்தமங்கலம் பகுதி கிளையில் சார்பாக, உத்தரக்கிடி காவல் ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டுக்காடு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளைச் செயலாளர் எம்.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பி.பெருமாள், மாவட்ட உதவி செயலாளர் என்.ஜோதி ஆகியோர் உரையாற்றினர். இதில், சேந்தமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, உத்த ரக்கிடி காவல், பேளுக்குறிச்சி திருமலைபட்டி காளப் பநாயக்கன் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற் றுக்கும் மேற்பட்ட ஆடுகளை தொடர்ச்சியாக வெறி நாய் கள், செந்நாய்கள் கடித்து குதறி கொன்று வருகி றது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தடுக்க உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடாக ஆடுகளுக்கு தலா பத்தாயிரம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட் டமானது நடைபெற்றது. இதில், சங்கத்தின் கிளைத் தலைவர் கணபதி, கிளைப் பொருளாளர் எஸ்.நடரா ஜன், உதவிச் செயலாளர் சாந்தி, ராஜேந்திரன், உதவி தலைவர் தமிழ்வாணன் மற்றும் வளர்மதி, சத்திய ஜோதி, வரதராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.