உதகை, பிப்.27- கூடலூரில் சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தில் அடிபட்டு சாலையில் மயங்கி விழுந்த சிறுத்தை, சிறிது நேரத்திற்கு பின் மயக்கம் தெளிந்தவுடன் எழுந்து மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. நீலகிரி மாவட்டம், கூட லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிக ரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கூடலூரில் இருந்து ராஜேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நடுகாணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மரப்பாலம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை திடீ ரென சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனத் தில் அடிபட்டு சாலையில் மயங்கி விழுந்தது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் சிறுத்தையை கண்டதும் வாக னத்தை சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித் தார். இதனை அடுத்து சாலையில் மயங்கி கிடந்த சிறுத்தை யால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின் றன. இது தொடர்பாக அவ்வழியாக சென்ற பயணிகள் உடன டியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், சிறிது நேரம் சாலையில் மயங்கி கிடந்த சிறுத்தை பின்னர் திடீரென எழுந்து கண்ணிமைக்கும் நேரத் தில் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி கள் அவ்வழியாக சென்ற பயணிகள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.