districts

img

பேரூராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து

சேலம், பிப்.27- கன்னங்குறிச்சி பேரூராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது. சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், மின் மயானம், அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பை கள் மூக்கனேரி கரையோரம் பேரூராட்சி பணியாளர்கள் நாள்தோறும் கொட்டி வருகின்றனர். மின் மயானத்திற்கு உயிரிழந்தவர்களை கொண்டு வரும்பொழுது அவர்களு டைய உடைமைகளையும் இப்பகுதியில் வீசி செல்கின்ற னர். மேலும், வீசி செல்கிற உடமைகளை உறவினர்கள் உடன டியாக தீ வைத்து எரிக்கின்றனர். இந்நிலையில், வியாழ னன்று திடீரென அந்த குப்பைக்கிடங்கு பகுதியில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்புத் துறையி னருக்கு கொடுத்த தகவல் அடிப்படையில், செவ்வாய் பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியி லுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளி மாண வர்கள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைமூட்டத் தால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.