கள்ளக்குறிச்சி, மே 18 - குடிநீர் வழங்காததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் மக்கள் முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்தில் 11 தெருக்கள் உள்ளன இதில் நான்காவது தெருவில் உள்ள குடி யிருப்பு வாசிகளுக்கு கடந்த மூன்று நாட்க ளாக கிராம ஊராட்சி மூலம் குடிநீர் வினி யோகம் செய்யாததால் அந்தத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கடுமை யாக அவதிப்பட்டு வருகின்றனர் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை ஆசனூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் இடைக்கல்ப காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படு வதாக உறுதியளித்ததற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்ற னர்.