ராணிப்பேட்டை, அக். 15 – கலவை சுற்றியுள்ள ஏழை எளிய ஆதி திராவிடர் மக்களுக்கு இலவசமாக அர சாங்கம் வழங்கிய பட்டாவை பத்திர பதிவு மேற்கொள்ள மறுக்கும் கலவை சார்பதி வாளர் கயல்விழியை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் செவ்வாயன்று (அக். 15) கலவை சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நகர செயலாளர் கே.ஆர். சதீஷ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பெ. அம்பேத்கர் வர வேற்புரை ஆற்றினார். சிபிஎம் தாலுகா செய லாளர் எஸ். கிட்டு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி. ரகுபதி, கே. சேகர், சிபிஐ மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், விசிக மாவட்டப் பொருளாளர் பெ. சம்பத், தொகுதி துணை செயலாளர் எஸ். சிவா, ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், பாமக ஒன்றியச் செயலாளர் சுரேஷ், அதிமுக திமிரி ஒன்றிய செயலாளர் எம். குமார், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை கெங்கன், பொதுநல சங்கம் தலைவர் கே. சத்திய நாராயணன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். இறுதியாக அஇஅதிமுக மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் எம். சங்கர் நன்றி கூறி முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சார்பதிவாளர் அலுவலக நிர்வாக சீர்கேடு மற்றும் பொதுமக்களை அலைக்கழிக்கும் அராஜக ஆணவப்போக்கு, வருவாய் துறை அளித்த பட்டாவின் மீது நம்பிக்கை இல்லாமல் மெய் தன்மை சான்று கேட்டு பொதுமக்களை மாத கணக்கில் அலைக்கழிக்கும் அதிகாரத் திமிரை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.