நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வரிடம் 36 பேரின் உடல் தானம் படிவத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார். இதில் செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, நிர்வாகிகள் சந்திரன், ஜோதி, கோட்டீஸ்வரன், விஸ்வநாதன் வழக்கறிஞர் ஷினு ஆகியோர் உடன் இருந்தனர்.