மதராந்தகம், ஜூலை 4 –
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதனன்று காலை நெல்லை யில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் பின்னால் குறுகிய இடை வெளியில் திருவண்ணா மலையில் இருந்து சென்னை நோக்கி மற்றொரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (45) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்துகளில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த படாளம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.