ராணிப்பேட்டை, நவ. 27 – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்ததினத்தையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழனன்று (நவ. 27) பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பித்தார். ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன், தமிழ் செல்வி தம்பதியருக்கு வியாழனன்று ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அமைச்சர் ஆர். காந்தி தங்க மோதிரம் அணிவித்தார். ராணிப்பேட்டை வி.ஆர்.வி. துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கினார். தொடர்ந்து ஆற்காடு சட்டமன்றத் தொகுதி ஆற்காடு நகரம் ஆற்காடு கிழக்கு, வாலாஜா ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கினார். புதனன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து ஏலக்காய் மாலை அணி வித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரி வித்தார். இதில் மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி, நகர மன்ற தலைவி சுஜாதா வினோத், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, வினோத், குமார், நகர செயலாளர் பூங்காவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
