தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், உத்திரபிரதேச மாநில மின்சார நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளை ஆவடி செயற்பொறியாளர் அலுவலகம் அருகே வியாழனன்று (நவ.27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு கிளை செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், நிர்வாகிகள் எஸ்.தசரதன், ஜி.குப்பன், சி.அஜிகுமார், வி.விஜயபாஸ்கர், வி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
