districts

மதுரை முக்கிய செய்திகள்

வருவாய்த்துறை அலுவலர் சங்க கொடியேற்று விழா 

இராமநாதபுரம், ஆக.5-  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 59 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு திருவாடானை வட்டக்கிளையின் சார்பில்  வெள்ளியன்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியேற்று விழா வட்டத் தலைவர் அமுதன் தலைமையில் நடைபெற்றது. சங்கத் தின் முன்னாள் மாநிலச் செயலாளர்  ஆர்.செந்தில்வேல் முருகன் சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார். இந்நிகழ்வில் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சி யர் சாந்தி, துணை வட்டாட்சியர்கள் ஜஸ்டின் பெர்னாண் டோ, அமர்நாத், பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

70 வயது  ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

திண்டுக்கல், ஆக.5- தேர்தல் வாக்குறுதியின்படி 70 வயதான ஓய்வூதியர்க ளுக்கு 10 சதவீதமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க  மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.  திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் வட்டார மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டாரத்தலைவர் சின்ன மணி தலைமை வகித்தார். செயலாளர் சத்தியசீலன், பொரு ளாளர் ராமலிங்கம் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர்.  அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச்செயலாளர் எஸ்.எம்.ஜெயசீலன், எம்.எல்.கேசவன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டத்தலை வர் சுந்தரம், மாவட்டச்செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். மாநாட்டில் புதிய வட்டாரத்தலைவராக பாஸ்கரன், செய லாளராக சத்தியசீலன், பொருளாளராக இருதயமேரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. (நநி)

பழங்குடியினர்  குழுவிற்கு  விண்ணப்பிக்க தேனி ஆட்சியர் அழைப்பு

தேனி ,ஆக.5- தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான மாவட்ட அளவிலான குழு மறு சீரமைக்கப்படவுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர்  க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;  தேனி மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான வன உரிமைச் சட்டம்-2005-ன்படி பழங்குடியினர் வன உரிமை வழங்கல் தொடர்பாக மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. தேனி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடி யினர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு பழங்குடியினர் வன உரிமைச்சட்டம் 2006-ன்படி தனிநபர் வன உரிமை, சமூக வன உரிமை வழங்குதல் தொடர்பாக மாவட்ட அளவிலான குழு மறு சீரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழு அமைப்பதற்கு பழங்குடி யினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாதிச் சான்றிதழுடன் விண்ணப்பத்திட வேண்டும். எனவே, மாவட்டத்திலுள்ள தகுதியான பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் 05.08.2022 முதல் 31.08.2022-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவல கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி மாவட்டம் - 625 531 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் .

புகையிலை பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது 

கடமலைக்குண்டு, ஆக.5- தேனி மாவட்டம், கண்டமனூர்  போலீஸ்  சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வெள்ளிக்கிழமை எம்.சுப்புலாபுரம் விலக்கில் நின்று தேனி-வருசநாடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது கண்டமனூர் பகுதியில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகைகளை பாக்கெட்டு களை பைக்கில் கடத்தி வந்த தேனியை சேர்ந்த பெரிய பாண்டி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 பண்டல் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

நாளை தேனியில் 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் 

தேனி ,ஆக.5- தேனி மாவட்டத்தில் ஞாயிறன்று மாபெரும்  கொரோ னா தடுப்பூசி முகாம் 671 இடங்களில் நடக்கிறது . 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்படடு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவ மனையின் முதல்வர் மரு. பாலாஜிநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (பொ) செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் , ஆண்டிபட்டி வட்டாரத்தில் 83 இடங்களில் 7,470 தடுப்பூசிகளும், போடிநாயக்கனூர் வட்டாரத்தில் 110 இடங்களில் 9,900 தடுப்பூசிகளும், சின்னமனூர் வட்டாரத்தில் 58 இடங்களில் 5,220 தடுப்பூசிகளும், கம்பம் வட்டாரத்தில் 89 இடங்களில் 8,010 தடுப்பூசிகளும், க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் 60 இடங்களில் 5,400 தடுப்பூசிகளும், பெரியகுளம் வட்டாரத்தில் 136 இடங்களில் 12,240 தடுப்பூசிகளும், தேனி வட்டாரத்தில் 84 இடங்களில் 7,560 தடுப்பூசிகளும், உத்தமபாளையம் வட்டாரத்தில் 51 இடங்களில் 4,590 தடுப்பூசிகளும் என மொத்தம் மாவட்டத்தில் 671 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 60,390 கோவிஷீல்டு, கோவாக்சின், காபே வேக்ஸ் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

ஒரு டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற  2 பேர் கைது 

விருதுநகர், ஆக.5- வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை கிராமத்தில் 1050 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற இரு வரை போலீசார் கைது செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன்பாறை பேருந்து நிறுத்தத்தில் உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாகன சோதனை நடை பெற்றது.  அப்போது, தலா 50 கிலோ எடையுள்ள 21 பிளாஸ்டிக் பைகளில் ரேசன் அரிசி பதுக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மொத்த எடை 1050 கிலோ ஆகும். இதையடுத்து, அரிசியை பறிமுதல் செய்த  போலீசார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி  மாவட்டம், கார்த்திகைபட்டியைச் சேர்ந்த ஜானகி ராமன்(32) மற்றும் காந்திநகரைச் சேர்ந்த முருகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் : ஒருவர்  கைது 

சிவகாசி, ஆக.5- சிவகாசி வட்டம்,  புதுக்கோட்டை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் விஜய பிரபா. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்தி ரன் (52) என்பவர்  விஜயபிரபாவை ஒருமையில் பேசி,  அலுவலகத்தை தீயிட்டு எரித்துவிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  அதேநபர்,  கிராம நிர்வாக அலுவலர் விஜயபிரபா வை பற்றியும், அதிகாரிகள் பற்றியும், முதலமைச்சரை யும் அசிங்கமாக முகநூலில் பல முறை பதிவிட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயபிரபா சிவகாசி தாசில்தார் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தாசில்தார்  லோகநாதன் அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

இராஜபாளையத்தில் தேங்காய் உடைப்பு போராட்டம்

இராசபாளையம், ஆக.5- தேங்காய்க்கு உரிய விலை வழங்கக் கோரி விரு துநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில்  தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சாலையில் தேங் காய் உடைக்கும் போராட்டம்  வெள்ளியன்று நடை பெற்றது. போராட்டத்திற்கு தென்னை விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் விஜய முரு கன், மாவட்ட செயலாளர் காளிதாசன், மாநிலக்குழு உறுப்பினர் பீமா ராஜா, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் என். ராமச்சந்திர ராஜா, மாவட்ட செயலாளர் பி அம்மையப்பன், ஐ பி ஆர் ரகுபதி ராஜா ,நீராத்தி லிங்கம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்ட னர். தேங்காய்க்கு கட்டுப்படி யாகும் விலையை அரசே  நிர்ணயம் செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மத்திய தொகுதியில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மதுரை,ஆக.5- தமிழக நிதி -மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதிற்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை வழங்குதல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் ஆகஸ்ட் 6 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.  ஆகஸ்ட் 6 அன்று மதுரை, ஆரப்பாளையம் பகுதி மாநகராட்சி வார்டு எண் - 21 , 22 , 56 , 57 , 58 ஆகிய பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை பொன்னகரம் பகுதி யில் அமைந்துள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 08.08.2022 அன்று மாநகராட்சி வார்டு எண் - 59 , 60 , 61 , 75 , 76 , 77 ஆகிய பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சுந்தரராஜபுரம் , மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும். மாநகராட்சி வார்டு எண் - 50 , 51 , 52 , 54 , 55 ஆகிய பகுதியை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சிம்மக் கல் பகுதியிலும் ஆகஸ்ட்  10 அன்று நடைபெறுகிறது இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கு தல், தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு மாற்றுத்திறனாளிக ளுக்கான வண்டி , மேற்கொ ள்ளுதல், மூன்று சக்கர, சக்கர நாற்காலி , செயற்கை அவயங்கள், நவீன காதொலி கருவிகள் போன்ற உதவி உபகரணங்கள், சுயவேலைவாய்ப்பு வங்கிக்கடன் வழங்குதல் மற்றும் பிற துறை சார்ந்த அரசு நலத்திட்டங்கள் வாயிலாக மாற்றுத்திறனா ளிகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. எனவே மேற்காணும்முகாம் களில் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை , தனித்துவ அடையாள அட்டை , ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சங்க சிவகங்கை மாவட்ட மாநாடு

மானாமதுரை, ஆக.5-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு பேரணி -பொதுக்கூட்டம்  மானாமதுரையில் நடைபெற்றது. பேரணி யும் நகராட்சி அலுவலகம் அருகே பொதுக் கூட்டமும் நடந்தது .பொதுக்கூட்டத்துக்கு கௌரவத் தலைவர் சுப்பிரமணியம் தலை மை வகித்தார்.  மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநில செயலாளர் ஜீவா, மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் பூபதி, மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் மலர்விழி திருநாவுக்க ரசு பூமிநாதன் ஆகியோர் பேசினர்.  பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் இன்னாசி ராஜா தலைமை வகித்தார் .மலர்விழி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். திருநாவுக்கரசு வரவேற்று பேசினார் .மாநில பொதுச்செயலாளர் நம்பி ராஜன், மாநில செயலாளர் ஜீவா ஆகி யோர் பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் மாவட்ட தலைவராக முத்துராம லிங்க பூபதி, மாவட்ட செயலாளராக இன்னாசி ராஜா, மாவட்ட பொருளாளராக ராமமூர்த்தி ,மாவட்ட துணைத் தலைவர்களாக மலர்விழி, லிங்கம்மாள், சுப்ரமணியன் ,மாவட்ட துணைத் செய லாளர்களாக திருநாவுக்கரசு, மனோக ரன்,விபிசிங், ஆகியோர் தேர்வு செய்யப் பட்டார்கள். தமிழக அரசு வழங்குகிற ஓய்வூதிய பராமரிப்பு தொகையை ரூ. 3500 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நிரந்தர அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்  திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சாத்தூர், ஆக.5- இருக்கன்குடி மாரியம்மன் கோயில் “ஆடி கடைசி வெள்ளி” திருவிழா கொடி யேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி   மாரி யம்மன் கோயில் உள்ளது.  இந்த கோவி லில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத் திருவிழாவைக் காண தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதுண்டு.  இந்த நிலையில் இருக்கன்குடி  மாரி யம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளித் திருவிழா ஆகஸ்ட் 12ல்  நடைபெற உள்ளது.   பக்தர்களின் வச திக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் கூடுதலான காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். தற்காலிக பேருந்து நிறுத்தம் இருக்கன்குடி அருகே ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கியூட் தேர்வு வினாத்தாள் வழங்காமல்  இரவு வரை மாணவ, மாணவியர்கள் அலைக்கழிப்பு

திண்டுக்கல், ஆக.5- திண்டுக்கல்லில் மத்திய பல்கலைக் கழக நுழைவுத் தேர்வான கியூட் தேர்வில் இரண்டாம் தாளுக்காக மாணவ, மாணவி யர்களை  இரவு வரை காக்க வைத்து அலைக்கழிக்கப்பட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல் கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர் கள் சேர்க்கைக்காக மோடி அரசாங்கம் நீட் தேர்வு போன்று இளங்கலை பாடத்திட்டங்க ளுக்கு கியூட் என்ற நுழைவு தேர்வை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி யுள்ளது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்கனவே கண்டனம் தெரி வித்துள்ளது. காந்தி கிராம பல்கலைக்கழ கம் முன்பாக திண்டுக்கல் மாவட்டக்குழு வின் சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டுள்ளது. ஆனாலும் மத்திய பல்கலைக் கழகங்களில் இந்த நுழைவு தேர்வை மாணவ, மாணவியர்களுக்கு வலிந்து திணித்துள்ளது மோடி அரசு.  வியாழனன்று இந்த தேர்வுக்காக பழனிசாலையில் உள்ள எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்வுக்காக காலை 8 மணி முதல் காத்திருந்த மாணவ, மாணவியர்கள் காலையில் முதல் தாள் எழுதினர். பிற்பகல் இரண்டாம் தாள் எழுதுவதற்காக காத்திருந்தனர். பெற்றோர்களும் கல்லூரி க்கு வெளியே காத்திருந்தனர்.  இது தொடர்பாக மாலை 5 மணிக்கு கேட்ட போது மாணவ, மாணவியர்கள் பரிட்சை எழுதுவ தாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரி விக்கப்பட்டது. ஆனால் இரவு 7 மணி  ஆகியும் இரண்டாம் தாள் இணைய தளத்தில் வெளியிடப்படாததால் மாணவ,  மாணவியர்கள் காத்திருந்து ஏமாற்ற மடைந்தனர். பின்னர் இரண்டாம் தாள் தேர்வு மற்றொரு நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அனைத்து மாணவ, மாணவியர்களும் விடுவிக்கப் பட்டனர். மத்திய பல்கலைக்கழகங்களின் இந்த அலைக்கழிப்பால் மாணவ, மாணவி யர்களும், பெற்றோர்களும் அதிருப்தி யடைந்தனர். (நநி)

 

;