மதுரை ஆக 5- கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140 வீதம் கொள்முதல் செய்ய வேண்டும். கேரளத்தை போல் உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 வீதம் அரசு கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடை மூலம் வழங்க வேண்டும். மாவட்டம் தோறும் தேங்காய் எண்ணெய் ஆலை அமைக்க வேண்டும். விவ சாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருள் களுக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டக்குழு சார்பில் வாடிப்பட்டி ஆர் ஐ அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமையன்று தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தென்னை விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ச சீத்தாராமன் தலைமை வகித்தார். போராட் டத்தை துவக்கி வைத்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.நாகேந்திரன் பேசினார். கோரிக்கை விளக்கி தென்னை விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி.ஆர்.முத்து பேயாண்டி, மாவட்டத் தலைவர் ஏ.பிச்சை, உமர்தீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.வேல்பாண்டி, கருப்பட்டி பாசன விவசாயிகள் சங்கம் அப்பாஸ் ஆகியோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங் கோவன் பேசினார். போராட்டத்தின் நிறைவாக தேங்காய் விலை வீழ்ச்சியினை தடுத்து நிறுத்திட கோரி 100-க்கும் மேற்பட்ட தேங்காய் களை சாலையில் உடைத்து தங்களது எதிர்ப்பினை அரசுக்கு தெரிவித்தனர்.