districts

மதுரை விரைவு செய்திகள்

துணைவேந்தருக்கு பாராட்டு விழா 

தஞ்சாவூர், அக்.3 - தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியனின் பதவிக்காலம் அக்.3 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நிறைவு பெற்றது. இதையொட்டி துணைவேந்தருக்கு தமிழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை பிரிவு உபச்சார பாராட்டு விழா  நடைபெற்றது. விழாவிற்கு, மொழிப்புலத் தலைவர் பேராசிரியர் முனைவர்  இரா.காமராசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அலுவ லர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் கோ.பன்னீர் செல்வம் நன்றி கூறி னார்.

மதுக்கடைகளுக்கு  அக்.19 விடுமுறை 

தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங் கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், அக்.19  ஆம் தேதி மீலாடி நபியையொட்டி கடைகள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை  செய்யப்பட மாட்டாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

சிறப்பு இதய பரிசோதனை முகாம்

பேராவூரணி, அக்.3- பேராவூரணி லயன்ஸ் சங்கம், அமுதா டிரேடர்ஸ், ஆர்.ஆர்.கயர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோவை கே.ஜி.மருத்துவமனை இணைந்து சிறப்பு  இதய பரிசோதனை முகாம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஸ்ரீ நீவி சுகம் மருத்துவ மனையில் நடைபெற்ற, முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.சி.சி.ராஜா  தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.ரவிசந்திரன், டாக்டர் பி.விவே கானந்தன், டாக்டர் பி.என்.பிரேமலதா ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கோவை கே.ஜி.மருத்துவமனை சிஇஓ தலைமையிலான மருத்துவக் குழுவினர், நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி னர். இம்முகாமில் 220 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மேல்  சிகிச்சைக்காக 12 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். 


 

;