districts

img

26 மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து மக்கள் நலப்பணியாளர் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை, டிச.6 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடந்த 26 மாதங்களாக சம்ப ளம் வழங்கப்படாததைக் கண்டித்து மக்கள் நலப்பணியாளர் ஊராட்சி மன்ற  அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நடத்தினார். கடந்த அதிமுக ஆட்சியில் பணி யில் இருந்து நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

தற்பொழுது மக்கள்  நலப் பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ரூ.5000 சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலமாக ரூ.2500 என சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா குளமங்க லம் ஊராட்சியில் மக்கள் நலப் பணியா ளராக பணியாற்றி வருபவர் இரா.ஜீவா னந்தம். இவருக்கு கடந்த 26 மாதங்க ளாக ஊராட்சியில் இருந்து வழங்கக் கூடிய மாத ஊதியமான 2500 ரூபாய் வழங்கப்படவில்லை.

மேலும், ஊராட்சிமன்றத் தலைவர்  பாஞ்சாலியின் கணவர் செல்வக்குமார், மக்கள் நலப்பணியாளர் ஜீவானந்தத்தை பணிசெய்ய விடாமல் தொந்தரவு செய்வதோடு, கொலை செய்யும் நோக்கத்தோடு மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் ரூ.5000 சம்பளத்தையும் கடந்த இரண்டு மாதங்களாக அதிகாரி களிடம் தவறான தகவலைத் தந்து முடக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மக்கள் நலப்பணியாளர் ஜீவானந்தம், கடந்த வியாழக்கிழமை காலை முதல் ஊராட்சி  மன்ற அலுவலகம் முன்பாக காத்திருக் கும் போராட்டத்தை நடத்தி வந்தார்.

அனைத்துக் கட்சியினர் ஆதரவு

இதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை காலை முதல் குளமங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்துக் கட்சி யினரும் ஜீவானந்தத்திற்கு ஆதரவாக போராட்டத்திற்குத் தயாராகினர். பின்னர், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், குளமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் ஆ.குமாரவேல், வழக்கறிஞர் வளர்மதி, ஊராட்சி மன்றத் தலைவர் பாஞ்சாலி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் புஷ்ப ராஜ், திமுகவைச் சேர்ந்த நாகரா ஜன், அதிமுகவைச் சேர்ந்த தியாக ராஜன், தேமுதிகவைச் சேர்ந்த பவா னந்தம், மதிமுகவைச் சேர்ந்த மதி பிரபு, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எஸ்.மணிவண்ணன், எஸ். மதியழகன், ராஜா, துரை உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில், “அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மக்கள் நலப்பணியாளர் ஜீவானந்தத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் தருவது என்றும், மக்கள் நலப்பணியாளர் பணி யில் இடையூறு செய்வதற்கு நடவ டிக்கை எடுப்பதாகவும்” வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து  போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.