திங்கள், மார்ச் 1, 2021

districts

img

சாலையை சீரமைக்க கோரிக்கை

அவிநாசி,ஜன.24- அவிநாசி வேலாயுதம் பாளையத் தில் போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறியுள்ள சாலைகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி யில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் குழாய், அத்திக் கடவு திட்டம், கேபிள்  அமைக்கும் பணி கள் உள்ளிட்டவை நடைபெற்று முடிந் துள்ளது.

இதன் காரணமாக தார்ச்சாலை கள் முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற தாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;