districts

img

நெல்லையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஜூலை 31-இல் தொடர் முழக்கப் போராட்டம்

திருநெல்வேலி, ஜூலை 1 - ‘மக்கள் ஒற்றுமையை பாதுகாத் திடுக; காவல்துறையை சீர்படுத்துக; சமூக விரோதிகளை தனிமைப் படுத்துக’ என்ற முழக்கத்தோடு ஜூலை  31 அன்று நெல்லையில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநி லக்குழு கூட்டம் முடிவு செய்துள்ளது.

பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலக் குழு கூட்டத்திற்கு சங்கத் தின் மாநிலத் தலைவர் டி.செல்லக் கண்ணு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் நடைபெற்ற பணிகள், எதிர்கால பணிகள் குறித்து பேசினார்.

 கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் மோகனா, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பி.சுகந்தி, கே.சுவாமி நாதன், முன்னாள் எம்எல்ஏ மூத்த தலை வர் ஆர்.கிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நெல்லை  மாவட்டத் தலைவர் ஆர்.மதுபால், மாவட்டச் செயலாளர் எம்.சுடலை ராஜ், மாவட்ட பொருளாளர் வழக்கறி ஞர் கு.பழனி உள்ளிட்டோர் பேசினர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாதி ரீதியான  படுகொலைகள் நடத்தப் படுகின்றன. சாதிய ஒடுக்கு முறையின் ஒரு பகுதியாகவே இப்படுகொலைகள் நிகழ்கின்றன.

தமிழக அரசு உடனடி யாக இதில் தலையிட்டு தடுத்திட வேண்டும். சாதி ஆணவ படு கொலைக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக தனிச்சட்டம்இயற்ற வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் துப்புரவு பொறியியல் துறையை துவங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.