districts

img

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு குமரி மாவட்டத்தில் அஞ்சலி

நாகர்கோவில், ஆக. 4- கேரளத்தின் வயநாடு மாவட்டம் முண்டக்கை  பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200  க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 200க்கும் மேற் பட்டோர் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. மறைந்த வர்களுக்கு நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப் பட்டது. நாகர்கோவிலில் சிபிஎம் மாநகர் குழு சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப் பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அக மது உசேன், எஸ்.அந்தோணி மாவட்டக் குழு  உறுப்பினர் கே.மோகன், மாநகர் குழு செயலா ளர் மனோகர் ஜஸ்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தக்கலை வட்டாரக் குழு சார்பில் தக்கலை பேருந்து நிலையத்தில் அஞ்சலி நடை பெற்றது. வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிபிஎம் அடைக்காக்குழி வட்டாரக்குழு சார்பில் நடைக்காவு ஜங்சனில் மெழுகுவர்த்தி  ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன், வட்டாரச்செயலாளர் ரெஜி, மாவட்டக்குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லாபாய், வட்டாரக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர். திருவட்டார் வட்டாராக்குழு சார்பில்  ஆற்றூர் சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  செலுத்தப்பட்டது.  திருவட்டார் வட்டார செயலாளர் ஆர் வில்சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ரவி, சகாய ஆன்டணி, வட்டார குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தோவாளை ஒன்றிய குழு சார்பாக திட்டு விளை சந்திப்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.  தோவாளை வட்டார குழு உறுப்பினர் எஸ்  சக்திவேல் தலைமை தாங்கினார்.  வட்டார செயலாளர் எஸ் மிக்கேல்  உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஈத்தாமொழியில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் ரெகுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மிடாலக்காடு பகுதியில் வயநாடு நிலச்சரி வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி  நிகழ்ச்சி நடைபெற்றது. கிள்ளியூர் கிழக்கு வட்டார செய லாளர் சாந்தகுமார், சோபனராஜ், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.