மயிலாடுதுறை ஜூன்-27? தமிழறிஞர் சீகன்பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தhற்கு பல்வேறு தரப்பினரும் அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். தரங்கம்பாடியில் சீகன்பால்கு வாழ்ந்த வீட்டில் இயங்கி வருகிற சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் இயக்குநர் டாக்டர் சாமுவேல் மனுவேல் மற்றும் அருங்காட்சியகத்தின் அலுவலர்கள்,ஊழியர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அருங்காட்சியக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:. தமிழுக்கு தொண்டாற்றியும், பெண் கல்வியை அறிமுகப்படுத்தியவரும் அச்சுகலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவரும் பல சமூக சேவைகளை மக்களுக்கு செய்தவருமாகிய சீகன்பால்கு அவர்களுக்கு சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்க அரசு சார்பாக மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக முயற்சிகள் எடுத்த அமைச்சர் பெருமக்களுக்கும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், திருச்சி சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ். ,சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தரங்கை பேராயர் மாமறை கிறிஸ்டியன் சாம்ராஜ் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் உள்ளூர் சபைகுரு .சாம்சன் மோசஸ் மேலும் இதற்காக உறுதுணையாக செயல்பட்ட அமைப்புகள், சபை போதகர்கள் மற்றும் தீக்கதிர் நாளிதழ் உள்ளிட்ட பத்திரிகை தொலைக்காட்சி நண்பர்களுக்கும் சீகன்பால்கு அருங்காட்சியக இயக்குநர் என்ற முறையில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.