districts

img

காலமானார்

திருவாரூர், ஆக.16 - ஓய்வு பெற்ற ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான ஆர்.கோவிந்தராஜின் துணைவியார் ஜி.தனலெட்சுமி அம்மையார் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.  அம்மையாரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் கிடாரங்கொண் டானில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்று,  அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கலைமணி, கே.ஜி.ரகுராமன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சௌந்த ரராஜன், செயலாளர் ஜீ.வெங்கடேசன் மற்றும் வெகுஜன  அரங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். அம்மையாரது இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.