districts

img

ஜூலை 16-ஐ குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரிக்கை

கும்பகோணம், ஜூலை 16 - 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் குழந்தை களுக்கு போதுமான வசதி இல்லாமல்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94  குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வு உலகையே நிலைகுலை யச் செய்தது.

அப்பள்ளியின் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மலர் வளை யம் வைத்து வீர வணக்கம் செலுத்தப் பட்டது. 

அப்போது, ஜூலை 16-ஐ குழந்தை கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். அன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.  புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். அரசு அங்கீ காரம் இன்றி செயல்படும் தனியார் கல்வி நிலையங்களை, பள்ளிகளை மூட வேண்டும். தனியார் கல்வி நிலை யங்களை உடனடியாக ஆய்வு செய்து  தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்

இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஷம்சீர், மாநிலச் செயலாளர் அரவிந்தன், மாநில  துணைத்தலைவர் ஆனந்த், நாகை மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, தஞ்சை மாவட்டச் செயலாளர் சந்துரு, தஞ்சை மாவட்டத் தலைவர் அர்ஜு னன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மாநிலத் தலைவர் ஷம்சீர் பேசுகையில், “கும்பகோணம் பள்ளியில் நடந்த சம்பவம் போன்று இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருப்ப தற்கு, சம்பத் கமிட்டி பரிந்துரை செய்த பள்ளிகளின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேண்டும்” என்றார்.