தஞ்சாவூர், பிப்.11- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் ஏனாதிகரம்பை, அம்மையாண்டி, செங்கமங்கலம், ஆதனூர் மற்றும் கழனிவாசல் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் கழனிவாசல் வாய்க்காலில், சுமார் 11.50 கி.மீட்டர் வரை உள்ள குறுக்கு கட்டுமானங்களை புனரமைக்கும் பணி, நீர்வளத்துறை கல்லணைக் கால்வாய் திட்டம் சார்பில், சுமார் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணி துவக்க விழா அம்மையாண்டி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.