மயிலாடுதுறை, செப்.10 - மயிலாடுதுறை அருகே வாய்க்கால் புறம்போக்கு பாதையை ஆக்கிரமித்து அடைத்ததால் 10 குடும்பத்தினர் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 7 ஆண்டுகளாக வாய்க்காலில் இறங்கிச் செல்வதாக குற்றம்சாட்டி, இதில் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மயிலாடுதுறை அருகே 10 குடும்பத் தினர் பயன்படுத்தி வந்த அரசுக்குச் சொந்தமான பொது வழியை ஆக்கிர மித்து அடைத்து வைத்ததால், வழி யில்லாமல் வாய்க்காலில் இறங்கிச் செல்வதாக குற்றம்சாட்டி திங்களன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக மணக்குடி செட்டி தெருவில் வசித்து வரும் பழனிவேல் என்பவர் அளித்த மனுவில், “60 வரு டங்களாக பத்து குடும்பத்தினர் குடி யிருந்து வரும் நிலையில், தாங்கள் வழியாக பயன்படுத்தி வந்த அரசுக்குச் சொந்தமான வாய்க்கால் பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், இரும்பு முள்வேலி வைத்து தனிநபர் ஒரு வர் அடைத்து வைத்துள்ளதால் நாங்கள் வசிக்கும் வீட்டிற்குச் செல்ல முடியாமல் வாய்க்காலில் இறங்கிச் சென்று வருகிறோம். தங்களது வீட்டு இறப்பிற்கு நிகழ்வின்போதுகூட, இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கித்தான் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் பிள்ளைகளும் மழை காலங்க ளில் வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் இறங்கி சென்று வருகின்றனர். இது குறித்து காவல்துறை, வருவாய்த்துறை யினரிடம் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்தி, அரசுக்குச் சொந்த மான பொது பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும்” என வலியுறுத்தி உள்ளனர்.