districts

வடகிழக்கு பருவமழை திருச்சி மாவட்ட நிர்வாகம் உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, அக்.16 - வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ கத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை  பெய்து வருகிறது.  24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, மீட்புப் பணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூ ராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய  அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர  மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வரு கிறது. பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: புகார் எண்: 1077, 0431-2418995 என்ற கட்ட ணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு,  மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்க லாம். தொடர்ந்து, 93840 56213 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். மேலும், வட்ட அலுவலகங்களிலும் 24 மணி  நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறை புகார் எண், வட்டாட்சியர் அலைபேசி எண் திருச்சி கிழக்கு - 0431-2711602, 94454 61808, திருச்சி மேற்கு - 0431-2410410, 94450 00602, திருவெறும்பூர் - 0431-2555542, 97900 93270, ஸ்ரீரங்கம் - 0431-2230871, 9445000603, மணப்பாறை - 04332-260576, 9445000604, மருங்காபுரி - 04332-299381, 9840378255, லால்குடி - 0431-2541233, 9445000605, மண்ணச்சநல்லூர் - 0431-2561791, 9445000606, முசிறி - 04326 260226, 9445000607, துறையூர் - 04327-222393,  9445000609, தொட்டியம் - 04326-254409, 94450 00608. இந்த கட்டுப்பாட்டு அறைகள் அல்லது வட்டாட்சியர்களின் அலைபேசி எண்ணில் பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர் பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது, பரவலாக மழை பெய்து வருவதால் ஆறு,  குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தை கள் செல்லாத வண்ணம் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழை காலத் தில் மழைவெள்ளம், நீர்நிலைகளின் நீர்  இருப்பு குறித்த தகவல்களை முன்கூட்டியே  உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்ச ரிக்கையாக இருக்க, TN-ALERT செயலியை ‘Google Play Store’ மற்றும் ‘IOS App  Store’-ல் இருந்து அனைவரும் பதிவிறக்கம்  செய்ய வேண்டும். இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம்  தொடர்பான புகார்களை தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.