districts

img

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த போது குத்தாலம், சுற்றுவட்டாரக் கிராமப் பகுதி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த போது குத்தாலம், சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்களை அணிதிரட்டி  விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், கூலி பிரச்சனைகளுக்காகவும் பல்வேறு வீரஞ்செறிந்த மக்கள் போராட்டங்களை நடத்தி மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிற மறைந்த தோழர்கள் சம்பா எம்.ராமசாமி, நல்லக்கண்ணு ஆகியோர். இவர்கள் வாழ்ந்த மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் காஞ்சிவாய் கிராமத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செவ்வாயன்று, தோழர்கள் சம்பா ராமசாமி, கே.நல்லக்கண்ணு ஆகியோரின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.