districts

திருச்சி முக்கிய செய்திகள்

பணியேற்பு விழா

பாபநாசம், ஜூன் 19 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநா சம் ரிவர் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 15 ஆம் ஆண்டு நிர்வா கிகள் பணியேற்பு விழா  வலங்கைமானில் நடைபெற்றது. மனோகரன் வரவேற்றார். தலைவராக கனிராஜ், செயலா ளராக அப்துல் ரசீது, பொருளா ளராக குருமூர்த்தி ஆகியோர் பணியேற்றனர். மாவட்ட ஆளுநர் தேர்வு  லியோன், மாவட்ட முன்னாள் ஆளுநர் ரமேஷ் பாபு சிறப்பு  விருந்தினர்களாக பங்கேற்ற னர். மண்டல உதவி ஆளுநர்  அறிவழகன் புதிய உறுப்பினர் களை அறிமுகம் செய்தார். இதில் திருச்சேறை சுடர்  இல்லத்திற்கு சக்கர நாற்காலி,  அரிசி, பிஸ்கட், தென் குவள வேலி அரசு உயர் நிலைப் பள்ளிக்கு மைக் செட், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 5 மாணவிகளுக்கு பரிசு  வழங்கப்பட்டது. கோபி பிரசாத் நன்றி கூறினார்.

ஜமாபந்தி

பாபநாசம்/அறந்தாங்கி, ஜூன் 18 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் தாலுகா அலுவலகத்தில் பாபநாசம் சரகத்திற்கான ஜமா பந்தி நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுதா ராணி தலைமை  வகித்தார். இதில் பட்டா மாறு தல், இலவச வீட்டுமனைப் பட்டா உட்பட 179  கோரிக்கை  மனுக்கள் பொது மக்களிட மிருந்து வரப் பெற்றன. பாபநா சம் தாசில்தார் மணிகண்டன், கண்காணிப்பாளர் ஜெய காந்தி, பாபநாசம் வட்ட வழங் கல் அலுவலர் அருணகிரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில் தார் முருககுமார், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய் வாளர் சுந்தரேஸ்வரன் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அலுவ லகத்தில் வருவாய் தீர்வாயம் 1433 ஜமாபந்தி நிகழ்வினை துணை ஆட்சியர் ஸ்ரீதர் பார்வை யிட்டு துவக்கி வைத்தார். இந்த ஜமாபந்தி நிகழ்வில்  அறந்தாங்கி ஒன்றியத்துக் குட்பட்ட சுமார் 70-க்கும் மேற் பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், வருமானவரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கணினி திருத்தம் செய்தல் மற்றும் ரேசன் கார்டு பெறுவதற்கான மனுக்களை வழங்கினர். அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து  கொண்டனர். இந்த ஜமாபந்தி யில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உட னடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு, ஆவணங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

ஜூன் 28-இல்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 18 - மயிலாடுதுறை மாவட்டத் தில் 2024 ஜூன் மாத விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், ஜூன் 28 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மயிலாடு துறை மாவட்ட அனைத்து முன் னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீர்ப் பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொ டர்புடைய கருத்துகளை தெரி விக்கலாம் என மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி தெரிவித் துள்ளார்.

மூட நம்பிக்கையால் பேரனைக் கொன்ற தாத்தா கைது

அரியலூர், ஜூன் 18- அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர்  வீரமுத்து-ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுரு கன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சங்கீதாவிற்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை உள்ளது.  பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் தனது பெற்றோர்களு டன் இருந்துள்ளார். கடந்த ஜூன் 14 அன்று அதிகாலை குழந்தையை தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். காலை எழுந்து பார்த்த போது, தனது அருகில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா தேடிப் பார்த்த போது, வீட்டுக்கு  பின்புறம் இருந்த  தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப் பட்டு இறந்த கிடப்பது கண்டறியப்பட்டது. பின்பு, ஜெயங்கொண்டம் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற  போலீசார் சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.  அப்போது, குழந்தையின் தாத்தா வீரமுத்து (58), பாட்டி ரேவதி ஆகி யோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் சந்தேகம் எழுந்தது. பிறகு தாத்தா வீரமுத்துவிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். அதில்  தனது பேரனை, தானே கொன்றதாக வீரமுத்து ஒப்புக் கொண்டுள்ளார்.  அதன்படி வீரமுத்து அளித்த வாக்குமூலத்தில், “சித்திரை மாதம் (6.5.24) குழந்தை சாத்விக் பிறந்ததால், தனது குடும்பத்திற்கும், சம்பந்தி  குடும்பத்திற்கும் ஆபத்து என்று அனைவரும் கூறியதால் கொலை செய் தேன்” என தெரிவித்துள்ளார். மூடநம்பிக்கை காரணமாக, மற்றவர்கள் பேச்சைக் கேட்டு 38 நாட்களே ஆன பேரனை, தாத்தாவே கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோமாரி நோய் தடுப்பு கால்நடை சிறப்பு முகாம்

பொன்னமராவதி, ஜூன் 18 -  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  கண்டியாநத்தம் ஊராட்சியில் கண்டியாநத்தம் மற்றும்  க.புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் கோமாரி நோய்  தடுப்பு கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முருகேசன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய்களை தடுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை உதவி  மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழு வினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். கண்டி யாநத்தம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் பயனடைந்தனர். மேலும் கால்நடை தடுப்பூசி பணியானது, கால்நடை  மருத்துவமனை உள்ள ஆலவயலை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஜூன் 30 வரை தொடர்ந்து நடைபெற உள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறையினர்‌ தெரி வித்துள்ளனர்.

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

கும்பகோணம், ஜூன் 18- கும்பகோணம் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட திருட்டு  சம்பவங்கள் நூதன முறையில் தொடர்ந்து நடைபெறு கின்றன. இந்நிலையில் ஜூன் 15 அன்று கும்பகோணம் புதிய  பேருந்து நிலையத்தில் புவனேஸ்வரி என்பவர் பேருந்து  ஏற முயன்ற போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில்  வந்த மர்ம நபர், புவனேஸ்வரியின் கைப்பையையும், பணம் ரூ.2,000, செல்போன் மற்றும் சுமதி என்பவரின் கைப்பையையும் பணம் ரூ.5,000-யும் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து அதேபோல் கபிஸ்தலம், பாலக்கரை காவேரி ஓட்டல் அருகில் அகிலா கைப்பை, அதில் இருந்த  ரூ.10,100, செல்போன் ஆகியவற்றையும் அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் மற்றும் கபிஸ்த லம் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதியப் பட்டன. இந்த தொடர் வழிப்பறி நபர்களை கைது செய்யும் பொருட்டு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவுப்படி, கும்பகோணம் துணை  காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் மேற்பார்வை யில், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  ஜெகதீசன் மற்றும் கும்பகோணம் உட்கோட்ட குற்றத் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமை யிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்து வந்தனர். அப்போது தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பகோ ணம் அருகே உள்ள புளியம்பாடி காலனி தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரை கைது செய்து, அவரிட மிருந்து வழிப்பறி சம்பவங்களில் களவுபோன பணம் ரூ. 7000 மற்றும் இரு செல்போன்கள் (மதிப்பு ரூ.42,000/-) மீட்கப்பட்டுள்ளன. தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை 48 மணி நேரத் திற்குள் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்த கும்ப கோணம் உட்கோட்ட தனிப் படையினருக்கு உயர் அதி காரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ஜூன் 21 திருவாரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர், ஜுன் 18 - திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணிய மர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 21.6.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறு வனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனி யார்துறை முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு  மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.  மேலும், இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகா மில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை பதிவிறக்கம் செய்து  முகாமிற்கு கொண்டு வருமாறு மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

சென்ட்ரிங் பலகை சரிந்து விழுந்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

 பாபநாசம், ஜூன் 18- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரூ.9  கோடியில் புதுமாத்தூர்-ஒத்தைவீடு இடையே குடமுருட்டி  ஆற்றில் புதிய பாலம், கடந்த ஆறு மாதங்களாக தனி யார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. தினந்தோறும் சுமார் 40 பேர் பாலம் கட்டும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று இரவு வழக்கம் போல சுமார் 10 பேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது சென்ட்ரிங் பலகை சரிந்து விழுந்தது. இதில் திரு வாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ராயபுரத்தைச் சேர்ந்த ராமன் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படு காயமடைந்த நீடாமங்கலம், ராயபுரத்தைச் சேர்ந்த செல்வ மணி, நாகப்பட்டினம் பரவையைச் சேர்ந்த ராஜா, திருத் துறைப்பூண்டி கோட்டூரைச் சேர்ந்த மாதவன், மேற்கு வங்கத் தைச் சேர்ந்த சுபாஷ் ஆகிய 4 பேர் தஞ்சாவூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.


 

 

;