அறந்தாங்கி, நவ.14- மருத்துவர்களுக்கு பாது காப்பு வழங்க கோரி அறந் தாங்கி அரசு மருத்துவமனை யில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை கிண்டி மருத் துவமனையில், புதன் காலை புற்றுநோய் பிரிவு மருத்து வர் பாலாஜியை நோயாளி யின் உறவினர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற் பட்டது. இதனை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப் பட்டார். பின்னர் தமிழகம் முழு வதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து சம்பவ இடத் திற்கு துணை முதல்வர் உதய நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன் ஆகியோர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர் இதைய டுத்து அவர்கள் போராட்டத் தை விலக்கிக் கொண்டனர். இந்நிலையில் வியாழ னன்று, அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு மருத் துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்னை நிகழ்வுக்கு கண்டனம் தெரி வித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சார்ந்த மருத்துவர் ராதா கிருஷ்ணன் தலைமையில் மருத்துவர் முனியன், மருத்து வர் ரியாஸ் பாத்திமா மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்க அறந்தாங்கி கிளை பொ ருளாளர் டாக்டர் இளைய ராஜா ஆகியோர் முன்னிலை யில் இந்த கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் காளி முத்து, சிவபாலன், உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.