districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறையிலுள்ள பேருந்து பயணியர் நிழற்குடை பழுதடைந்த நிலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறையிலுள்ள பேருந்து பயணியர் நிழற்குடை பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்து நிழற்குடையின் உள்பகுதியில் மேற்பகுதியில் சிமெண்ட் காரை பெயர்ந்துள்ளது. மழைக்கு ஒதுங்கக் கூட மக்கள் அச்சப்படும் நிலையில் இந்த நிழற்குடை உள்ளது. இதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதேபோன்று திருப்பாலைத் துறையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள மற்றொரு பயணியர் நிழற்குடையின் வெளிப்பகுதி பழுதடைந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதையும் சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.