மயிலாடுதுறை, ஜூன் 23- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி இறப்பதற்கு காரண மாக இருந்த அரசு அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனை யில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சீர்காழியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலா ளர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கண்டன உரையாற்றினார். தரங்கம் பாடி ஒன்றியம், திருக்கடையூரில் மாவட்டக் குழு உறுப்பினர் அம்மை யப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் காபிரியேல், அமுல் காஸ்ட்ரோ, குணசுந்தரி, டி.ஆர்.ராணி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். செம்பனார்கோவில் ஒன்றியம் சார்பில், ஆக்கூர் முக்கூட்டில் மாவட்டக் குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தெட்சி ணாமூர்த்தி, ஜோதி, கபிலன் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். அதேபோன்று மயிலாடுதுறை, குத்தாலம் பகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திரளானோர் கலந்து கொண்டனர்.