districts

img

தள்ளுவண்டி,தரைக்கடை வியாபாரிகளுக்கு எதிரான போக்கை கடவூர் வட்டாட்சியர் கைவிடுக!

கரூர்,ஜன.22- கரூர் மாவட்ட தள்ளுவண்டி, தரைக் கடை தொழிலாளர் சங்கத்தின் கரூர்  மாவட்டக்குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.  கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தரகம்பட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றி கடந்த பல வருடங்களாக 40 க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பூ,  பழம், பிரியாணி கடை, காய் கடை  என பல்வேறு பொருட்களை தள்ளு வண்டி மற்றும் தரைக்கடைகள் மூலமாக போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி  வியாபாரம் செய்து வருகின்றார் கள். இந்த வியாபாரம் மூலம் கிடைக் கின்ற வருமானம் மூலமாகத் தான் 40  குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த சிர மத்திற்கிடையில் தங்களது வாழ்க் கையை  நடத்தி வருகின்றனர். தற்போது பேருந்து நிலையம் சுற்றி யுள்ள தள்ளுவண்டி, தரைக்கடை களை அகற்றும் படி அரசு அதிகாரிகள்  அவ்வப்பொழுது வந்து வியாபாரி களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். இந்த வியாபாரம் தவிர வேறு எந்த  தொழிலிலும் இவர்களுக்கு தெரியாது.   எனவே இந்த  தள்ளுவண்டி வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க  கூடிய முறையில் அவர்களை தற்போது  வியாபாரம் செய்து வரும் இடத்தி லேயே தொடர்ந்து வியபாரம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மனு வில் வலியுறுத்தினர்.  இதுகுறித்து தள்ளுவண்டி தரைக் கடை தொழிலாளர் சங்க சங்கத்தின் மாவட்ட செயலாளர் தண்டபாணி கூறு கையில், தனி நபர்களின் நலனுக்காக தள்ளுவண்டி, தரைக்கடைகளை அகற்ற வேண்டும் என்று கடவூர் வட்டாட் சியரின் உத்தரவின் பேரில் அரசு அலு வலர்கள் தொடர்ந்து தொழிலாளர் களுக்கு பல்வேறு இடையூறுகளை கொடுத்துவருகின்றனர். இதனால் வியாபாரிகள் தங்களது பொருட்களை விற்க முடியாமல் கடும் நஷ்டத்தை தினம்தோறும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையை வட்டாட்சியர் கைவிட வேண்டும். தரகம்பட்டியில்  பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடை இல்லை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; இல்லை, சுகாதாராமான கழிப்பிட வசதி கள் இல்லை. பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் அடிப்படையான வசதி கள் பேருந்து நிலையத்தில் எதுவும் இல்லை.  இது போன்ற மக்களின் நலனுக் கான அடிப்படை வசதிகான பணிகளை  கடவூர் வட்டாட்சியர் மேற்கொள்ளா மல் அன்றாட வாழ்வுக்காகாக எவ்வித  இடையூறும் இன்றி நேர்மையாக, உண்மையாக  வியாபாரம் நடத்திவரும் தொழிலாள்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்துடன் செயல்ப டும் கடவூர் வட்டாட்சியரை கரூர்  மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை  தொழிலாளர் சங்கம் கண்டிக்கிறோம்.  தரைக்கடை, தள்ளுவண்டி தொழிலா ளர்களை பாதுகாக்க சங்கத்தின் சார்பில் தொடர்போராட்டங்கள் நடத்தப் படும் என்று கூறினார்.  சிஐடியு சங்க மாவட்ட பொருளா ளர் ப.சரணவன், தரகம்பட்டி கிளை  செயலாளர் மா.ஆனந்தன், வியாபாரி கள் மஞ்சுளா, குமார், பூங்கோதை, சதீஸ், அண்ணாதுரை, தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.