தஞ்சாவூர், ஆக.3- தஞ்சாவூர் மாவட்டத்தில், பாரம்பரிய கைவினைப் பொருள்களில் ஒன்றான, தஞ்சா வூர் கண்ணாடித் துண்டு வேலைப்பாடு பொருட்கள் தயாரித்திட கட்டணமில்லாப் பயிற்சி, தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில், கடந்த ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மாவட்ட தொழில் மையம் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டது. இதில், 49 பெண்கள், 4 ஆண்கள் என 53 நபர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாவட்ட அருங்காட்சியகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட 53 நபர்களுக்கும் பயிற்சி சான்றி தழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.