districts

img

பேருந்து நிலையத்தை கடலூருக்கு வெளியே அமைக்கக்கூடாது

கடலூர், ஆக.21- கடலூர் பேருந்து நிலையம் அமைப்பதில் வெளிப்படை தன்மை யுடன் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன் தலைமையில் மாநகராட்சி ஆணையரை சந்தித்த நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.  அதன் விவரம் வருமாறு:- கடலூரில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையம் கடலூர் சட்ட மன்ற தொகுதியில் வர வேண்டும். இதில் மாநகராட்சி வெளிப்படை தன்மை யுடன் செயல்பட வேண்டும்.  கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு வெளியில் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு கடலூரிலேயே பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் ஆறு போல சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. அதை சரி செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கடலூர் மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை.  இதற்கு தனியாக ஒரு கட்டண மில்லா தொலைபேசி எண்ணை  வாட்ஸ் ஆப் வசதியை மாநகராட்சி அறி முகப்படுத்த வேண்டும். தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் சாலை யில் திரியும் மாடுகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு செல்லும் போது பாதுகாப்பற்ற குடிநீர் இருக்கிறது. இவற்றை பாதுகாப்பான குடிநீராக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீர்  கெடிலம் ஆற்றில் விடப்பட்ட கால்நடைகளுக்கு,  மனிதர்க ளுக்கு, விளை நிலங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நிலத்தடி நீர் மாசுபட்டு உள்ளது. மக்கள் நலன் கருதி இது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர், இந்த கோரிக்கைகள் மீது முன்னுரிமை அடிப்படையில் அனைத்தையும் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த சந்திப்பில் கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், இணை பொது செயலாளர் எஸ்.கே.தேவநாதன், நிர்வாகி கள் சண்முகம், கோபால் , செல்வராஜ், ஆலோசகர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.