districts

img

பாரம்பரிய நடனங்களை ஆடியவாறு வந்து பழங்குடியின மக்கள் குடியேறும் போராட்டம்

திருவண்ணாமலை,ஆக. 27- பழங்குடி இருளர் இன மக்கள் வீட்டுமனைப் பட்டா கேட்டு வந்த வாசி வட்டாட்சியர் அலு வலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள சேதரா குப்பம், மதுரா எஸ். மோட்டூர் கிராமங்களில் பல ஆண்டு காலமாக குடி யிருக்கும் பழங்குடி இரு ளர் இன மக்களுக்கு 15 நாட்களில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக, கடந்த ஜூன் மாதம் வட்டாட்சியர் உறுதியளித்தார். அதன்படி வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து ஆடு, மாடு, தட்டு முட்டு சாமான்களு டன் இம்மக்கள் வந்த வாசி வட்டாட்சியர் அலுவ லகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வந்தவாசி கோட்டை மூளை பகுதியிலிருந்து பாரம்பரிய நடனங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.   பின்னர், வந்தவாசி வட்டாட்சியர் பொன்னு சாமி, துணை காவல் கண்காணிப்பாளர் ஆகி யோர் போராட்டக் குழுவின ருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பழங்குடியின மக்களுக்கு விரைவில் மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதை யடுத்து குடியேறும் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்ற னர். இந்த போராட்டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத் தின் மாநில பொதுச் செய லாளரும், பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் உறுப்பினருமான இரா. சரவணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன், யாசர் அராபத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.